கம்பராமாயணம் 2456 · அயோத்தியா 12.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தீயின் - (ஓம வேள்வியின் ஆக்கிய) நெருப்பில்; ஆகுதிச் செல்வனும் - ஆகுதிகளை இட்டுச் செய்கின்ற வேள்விச் செல்வனாகிய பரத்துவாசனும்; ஆய காதலோடு - மேலிட்டெழுந்து உள்ளம் குளிர்ந்த அன்போடு; ஐயனைக் கொண்டு - பரதனை அழைத்துக்கொண்டு; தன் - தன்னுடைய; தூய சாலை உறைவிடம் - தூய்மையான தங்கும் இடமாகிய தவச் சாலையை; துன்னினான் - சென்றடைந்தான்; “மேய சேனைக்கு - பரதனுடன் வந்துள்ள சேனைகளுக்கு; விருந்து அமைப்பென்” எனாச் சிந்தித்தான் - விருந்து செய்வேன் என்று தன் மனத்தில் கருதினான்.
வேள்விச் செல்வன் ஆதலின் தேவர்களையும், பிறவற்றையும் வருவித்து விருந்து செய்ய இயன்றது என அறிக. 'சேனைக்கு அமைப்பென் விருந்து' என்பது பரதனையும் உள்ளடக்கியதேயாம்; அன்றி, பரதன் விருந்து அருந்தாமையின் அவன் தவக்கோலம் கண்டு அவனை விடுத்துச் சேனையை மட்டுமே பரத்துவாசன் கருதினன் எனலும் ஆம். சேனை என்று கூறினும் உடன்வந்தார் தாயர் பரிசனங்கள் அனைவரையும் கருதும் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With such love he took the noble one
- to his pure hermitage where he dwelt;
- and the sage whose wealth is the offerings poured into the fire
- thought: 'I will prepare a feast for the army that has come.'
What the poem says
Full of affection, the sage leads Paratan into his hermitage. He is a master of the Vedic fire sacrifice, and he decides to give a feast for the whole army.
"The army" includes the queens and everyone else who came. Perhaps it leaves out Paratan himself, who is living as an ascetic and will not feast.