கம்பராமாயணம் 2457 · அயோத்தியா 12.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துறந்த செல்வன் - (யான் எனது என்னும் அகப் புறப் பற்றுகளைக்) கைவிட்டு தவச்செல்வத்தையுடைய பரத்துவாசன்; நினைய - விருந்திட நினைத்த அளவில்; துறக்கம் - சுவர்க்க உலகம்; பறந்து வந்து படிந்தது - விண்ணிழிந்து வந்து காட்டில் தங்கியது; பல் சனம் - (சேனையின் உள்ள) பல மக்கள் கூட்டமும்; பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என - மறுபிறப்பு எடுத்து வேறு உலகத்தை அடைந்தவர்களைப்போல; முன்னைத் தம் வாழ்வு எலாம் - முன்னைய தம்முடைய வாழ்க்கைகளை எல்லாம்; மறந்து வைகினர் - மறந்து இன்பமார்ந்து இருந்தார்கள்.
சீரிய தவம் உடையோர் நினைத்த மாத்திரையானே அனைத்தும் நடக்கும். “வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம், ஈண்டு முயலப் படும்” (குறள் 265.) என்றார் வள்ளுவரும். வேறுலகு என்றது ஈண்டுச் சுவர்க்கமாகும். முன்னைய வாழ்வு என்றது அயோத்தியில் வாழ்ந்ததை. இராமனைப் பிரிந்த சோகமும் தொடர்ந்து வழிநடந்து வந்து பட்ட வருத்தமும் மறந்தபடி. 'தான்' உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The moment the sage whose wealth is renunciation thought of it, heaven itself
- came flying down and settled there; and the many people,
- as if they had been born again and gained another world,
- stayed there, forgetting all their former lives.
What the poem says
The moment the sage, rich only in renunciation, thinks of it, heaven itself comes flying down and settles in the forest. Great austerity gets whatever it wishes, as the Tirukkuṟaḷ says.
The weary crowd from Ayōttī feel as though they have died and been reborn in paradise. For a while they forget their old lives, their grief for Irāmaṉ, and the hardship of the road.