கம்பராமாயணம் 249 · பால 5.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றன பற்பல இனிமை கூறி - என்று பலபல இனிய மொழிகளை இயம்பி; நல் குன்று உறழ் வரிசிலை குவவுத் தோளினாய் - நல்ல மலையை ஒத்ததும், கட்டமைந்த வில்லைத் தாங்கி இருப்பதுமான திரண்ட தோள்களை உடையவனே!; நன்றி கொள் அரிமகம் நடத்த எண்ணியோ - நன்மை பயக்கும் அசுவமேத வேள்வியை நடத்துவதற்கு நினைத்தோ; இன்று இங்கு என்னை அழைத்தது இயம்புவாய் என்றான் - இன்று இங்கு என்னை அழைத்த காரியத்தைச் சொல்லுவாய் என்று கலைக்கோட்டு முனிவன் கேட்டனன்.
இனிமை என்னும் பண்புப் பெயர் அப்பண்பை உடைய சொற்களை உணர்த்திக் குணிப் பெயராக நின்றது. உறழ்: உவம உருபு. நன்றி: நன்மை; பண்புப்பெயர். அரிமகம்: அசுவமேத யாகம். என்னை என்பது 'எனை' எனத் தொகுக்கப்பட்டது. கலைக்கோட்டு முனிவன், தன்னை அழைத்த காரணத்தைத் தயரதனிடம் வினவினான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying many such pleasing things, he went on: 'You whose massed shoulders
- bear a striped bow and are like a fine mountain,
- is it to perform the beneficent horse sacrifice
- that you have called me here today? Tell me,' he said.
What the poem says
After his compliments, the sage asks Tacarataṉ directly why he has been invited, guessing that the king wishes to perform the aśvamēdha, the horse sacrifice (here called arimakam).