கம்பராமாயணம் 248 · பால 5.80

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னலும், முனிவரன் இனிதின் நோக்கு உறா,
'மன்னவர் மன்ன! கேள்! வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால்
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வர் ஓ?'

பொருள் · Meaning in Tamil

என்னலும் முனிவரன் இனிது நோக்குறா - என்று தயரதன் கூறக் கேட்டதும் அம்முனிவர் மன்னனை இனிமையுறப் பார்த்து; மன்னவர் மன்ன! கேள் - மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக விளங்கும் பெருமையுடையவனே! கேட்பாயாக; வசிட்டன் என்னுமோர் நல் நெடும் தவன் துணை - வசிட்டன் எனப் புகழ் பெற்ற நல்ல, நீண்ட தவத்தினை உடைய இம் முனிவனது துணையும்; நவையில் செய்கையால் - குற்றமில்லாத நல்ல செய்கையும் உடைமையால்; நின்னை இவ்வுலகில் நிருபர் நேர்வரோ - உனக்கு இவ்வுலகத்துப் பிற மன்னர்கள் ஒப்பாவார் உண்டோ?

என்னல்: என்று சொல்லுதல். நோக்குறா: பார்த்து; செயா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். “தவன்துணை நவையில் செய்கையால்” எனக் கூட்டி முனிவனது துணையாகிய குற்றமற்ற செய்கையால் எனவும் கூறலாம். சூரிய குல வேந்தர்களுக்கு இந்த வசிட்டனது நீண்ட காலம் தொடர்ந்துள்ள துணையைக் குறிப்பதாகும். நவை: குற்றம். நேர்தல்: ஒப்பாதல். நேர்வரோ என்பதில் “ஓ” எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. செய்கையால்: நடத்தையால். ஒருவனை அவனது துணைவரையும் செய்கையையும் கொண்டே உலகத்தவர் அளவிடுவர். நீ நல்ல துணையைப் பெற்றிருக்கிறாய்; நற்குண நற்செய்கைகளையும் உடையவனாய் இருக்கிறாய். எனவே, உனக்கு நிகரான அரசர்கள் உண்டோ? என்கிறார் முனிவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At these words the great sage looked at him kindly:
  2. 'King of kings, listen! With a good sage of long penance
  3. called Vacittaṉ as your ally, and with your own faultless conduct,
  4. are there any kings in this world who equal you?'

What the poem says

Kalaikkōṭṭu Muṉivaṉ replies warmly. The world judges a man by the company he keeps and by his own conduct, and Tacarataṉ excels in both: he has Vacittaṉ, long the guide of the Solar kings, at his side, and his own deeds are blameless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉalum, muṉivaraṉ iṉitu nōkkuṟā,
'maṉṉavarmaṉṉa! kēḷ! vaciṭṭaṉ eṉṉum ōr
nal neṭun tavaṉ tuṇai navai il ceykaiyāl
niṉṉai iv ulakiṉil nirupar nērvarō?'