கம்பராமாயணம் 247 · பால 5.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சான்றவர் சான்றவ - பெரியோர்களால் பெரியோனே; தருமம் மாதவம் போன்று ஒளிர் புனித - தருமத்தையும், தவத்தையும் போல ஒளிர்கின்ற புனிதனே!; நின் அருளில் பூத்த - உங்கள் அருளினால் பரந்து விளங்கும்; என் ஆன்ற தொல்குலம் - பெருமைமிக்க எனது பழமை வாய்ந்த இந்தச் சூரிய குலம்; இனி அரசின் வைகும் - (தங்கள் வருகையால்) ஆட்சியில் நிலைபெற்று விளங்கும்; யான்தவம் உடைமையும் இழப்பின்றாம் - எனது தவம் பொருந்திய தன்மையும் இழத்தல் இல்லாததாயிற்று.
சான்றவர்: மேலோர் (சால்புடையவர் என்பது கருத்து). ஆல்: அசை. தருமம் போன்று பரந்த புகழுடைமையாலும், தவம் போன்று கலங்காது நிலைத்திருந்தலாலும் “தருமம், மாதவம் போன்றொளிர் புனித” என்றார். பூத்தல்: பெருகல். தவம் உடைமையும் இழப்பின்று - தவமுடையன் ஆகும் தன்மையிலும் இழப்பில்லை என்பதும் பொருளாகும்.
இன்று: குறிப்பு வினைமுற்று. இதுவரை மகப் பேறின்மையால் செய்தவம் இழந்தவனாக எண்ணியிருந்த மன்னன், முனிவரது வருகையால் மகப்பேறு வாய்க்கும் என்னும் உறுதியால் “யான் தவம் உடைமை இழப்பின்று” என்றானாகும். அரோ: அசை. சூரிய குலத்தின் பெருமையும், பழமையும் “ஆன்ற தொல்குலம்” என்பதால் புலனாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O worthiest of the worthy! Pure one who shines like dharma
- and great austerity! My great and ancient line, which has flowered by your grace,
- will now abide in its kingship;
- and my possession of penance too has suffered no loss!'
What the poem says
Tacarataṉ addresses the sage. Now that the sage has come, the king is sure his ancient Solar line will continue on the throne.
He had felt that his childlessness made his own penance fruitless; now he says it has not been lost after all. The sage shines like dharma because his fame spreads, and like penance because he is unshakeable.