கம்பராமாயணம் 246 · பால 5.78

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாமணி மண்டபம் மன்னி - உயர்ந்த மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபத்தை அடைந்து; மாசு அறு தூமணித் தவிசிடை - குற்றமற்ற மணிகளால் அமைந்த அரியணையில்; சுருதியே நிகர் கோமுனிக்கு அரசனை இருத்தி - வேதத்துக் கொப்பான கோமுனி யான கலைக் கோட்டு முனிவனை இருக்கச் செய்து; கொள்கடன் ஏமுறத்திருத்தி - அம்முனிவன் ஏற்றுக் கொள்ளத்தக்க கடமைகளை மனம் களிக்கும்படி திருத்தமாகச் செய்து; வேறு இனைய செப்பினான் - வேறு சிறந்தவையான - பின்வருவனவற்றைக் கூறலானான்.

முதலடி முற்று மோனை. மண்டபம்: இங்கு வேத்தவை. மன்னி: விளங்க; மாசு: அழுக்கு (குற்றம்); தூ: தூய்மை; தவிசு: ஆசனம் (இருக்கை); சுருதி: வேதம்; கொள்கடன்: வினைத்தொகை; கடன்: கடமை; ஏமம்: அழகு; ஏம் எனக் குறுகி நின்றது. திருத்தல்: செய்தல்; செப்புதல்: கூறுதல் (இசைச் சொல் என்பர்). அரசர் தலைவன், முனிவர் தலைவனையே உபசரித்தான் என்பது கருத்து.

மண்டபம் மன்னி - கோமுனிக்கரசனை - தவிசிடை இருத்தி - கடன் திருத்தி - இனைய செப்பினான் என்று இயைக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming to the great jewelled hall, on a flawless
  2. seat of pure gems he seated that king among sages,
  3. equal to the Veda itself, and having fulfilled with delight every rite due,
  4. he spoke further words such as these.

What the poem says

In the jewelled hall Tacarataṉ seats the sage on a throne and honours him with every rite. The king of kings serves the king of sages.

The opening line alliterates throughout in Tamil (muṟṟu mōṉai). Tacarataṉ's speech follows in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māmaṇi maṇṭapam maṉṉi mācu aṟu
tū maṇit taviciṭai curutiyē nikar
kō muṉikku aracaṉai irutti, koḷ kaṭaṉ
ēmuṟat tirutti vēṟu iṉaiya ceppiṉāṉ.