கம்பராமாயணம் 245 · பால 5.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கசட்டுறு வினைத்தொழில் - குற்றங்கள் விளைவிக்கும் செயல்களை உடைய; கள்வராய் உழல் அசட்டர்கள் - கள்வர்களாகத் திரிகின்ற அறிவிலிகள் போன்ற; ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும் - ஐம் புலன்களையும் அற்றுப் போவாராகச் செய்த வசிட்டனும்; அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டனும் - அரிய வேதங்களின் வடிவைப் போல விளங்கும் சிறந்த முனிவனான கலைக்கோட்டு முனிவனும்; வேத்தவை பொலிய மேவினார் - அந்த அரசவை பொலிவெய்துமாறு அடைந்தனர்.
கசடு: குற்றம். வினைத்தொழில்: செயல். கள்வர்: களவு செய்வோன் வஞ்சகராவர். உழல் அசட்டர்: வினைத் தொகை. அசடர்: அறிவிலிகள். 'ஐவரை அறுவர் ஆக்கிய': ஐம்புலன்களையும் தத்தம் நெறியில் செல்லவிடாது தடுத்து நிறுத்திய என்பது பொருள். ஐந்து, ஆறு என்ற எண்ணுப் பெயர்களை அமைத்த நயம் கருதத்தக்கது. வசிட்டன் என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்பது பொருளாம். விசிட்டன்: சிறந்தவன். அரிய மறைகளெல்லாம் திரண்டு ஒரு வடிவம் கொண்டதெனத் திகழ்பவன் என்றது கலைக்கோட்டு முனிவனை. வேந்து + அவை: வேத்தவை. வேந்தவைக்கு இம்முனிவர்களால் பொலிவுண்டாயிற்று என்பது கருத்து.
ஐவரை அறுவராக்கிய வசிட்டனும் - மறை வடிவு போன்று ஒளிர் விசிட்டனும் - பொலிய மேவினார் என்பது பொருள் முடிவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vacittaṉ, who turned the five, those fools who roam as thieves
- bent on faulty deeds, into nothing,
- and the eminent one who shone like the rare Vedas in bodily form
- came, so that the royal assembly shone.
What the poem says
Vacittaṉ and Kalaikkōṭṭu Muṉivaṉ enter the royal court together, and their presence makes it glorious.
The five thieves are the five senses, which steal the mind away. The poet puns on numbers: Vacittaṉ turned the 'five' (aivar) into 'aṟuvar', which looks like 'six' but means those who are cut off, that is, he subdued them. He also plays on the sound of Vacittaṉ and Vicittaṉ, 'the distinguished one'.