கம்பராமாயணம் 244 · பால 5.76

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கமலவாள் முகவடிவுடை மடந்தையர் - தாமரை மலர் போன்ற ஒளி பொருந்திய முகமும், அழகும், இளமையும் வாய்ந்த சுமங்கலிகளாகிய பெண்கள்; வாழ்த்து எடுப்ப - வரும் வழி யெல்லாம் வாழ்த்தொலி கூற; முடி உடை வேந்தன் - மணி முடி தரித்த மன்னனாகிய தயரதன்; அம்முனிவனோடும் - அந்தக் கலைக்கோட்டு மாமுனியோடும்; ஓர் கடிகையில் - ஒரு நாழிகைப் போதிலே; அடிகுரல் முரசு அதிர் - குணில் கொண்டு அடிப்பதால் ஒலிமிக்குடைய முரசங்கள் முழங்கும்; அயோத்தி அடைந்தனன் - அயோத்தி மாநகரை அடைந்தான்.

அடிகுரல்: அடிக்கப்படுகின்ற குரல்; வினைத்தொகை. கடிகை: நாழிகை என்பது பொருள். இதற்கு நல்ல நேரத்திலே என்றும் கூறலாம். முனிவரது நல்ல வருகையைக் காட்ட முரசு முழங்கப்பட்டதென்க. கமலவாண்முக வடிவுடை மடந்தையர் என்பதில் கமலம் கருணையையும், வடிவு அழகையும், மடந்தை என்பதால் இளமையையும் உடையவர்கள் அப்பெண்கள் என அறியலாம். பெரியோர்களுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்பவர் சுமங்கலிகளே என்பதால் இவ்வாறு பொருள் கூறப்பட்டது. வாழ்த்து: பல்லாண்டிசை.

மடந்தையர் வாழ்த்தெடுப்ப - வேந்தன் - முனிவனோடும் - ஓர் கடிகையில் முரசு அதிர் அயோத்தி அடைந்தனன் என்க. எடுப்பவே: ஏ அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the great city of Ayōtti, where drums with beaten voices thunder,
  2. the crowned king came with that sage
  3. in a single nāḻikai, while maidens with forms
  4. of lovely lotus-bright faces raised songs of blessing.

What the poem says

Tacarataṉ returns to Ayōtti with the sage in one nāḻikai, a unit of twenty-four minutes; the word may also suggest an auspicious hour. Married women line the way singing blessings, as was the custom when welcoming the great.

In the description of the women, the lotus suggests compassion, form their beauty, and 'maidens' their youth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭi kural muracu atir ayōtti mā nakar,
muṭiyuṭai vēntaṉ, am muṉivaṉōṭum, ōr
kaṭikaiyiṉ aṭaintaṉaṉ, kamala vāḷ muka
vaṭivuṭai maṭantaiyar vāḻttu eṭuppavē.