கம்பராமாயணம் 2513 · அயோத்தியா 12.64

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எம் பரத்தது ஆக்கி அரசுரிமை , இந்தியங்கள்
தம் பரத்தில் வீழாத் தவம் இழைத்த ஆறு இது ஓ ?
சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளிச் சதமகற்கு , அன்று ,
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் ! '

பொருள் · Meaning in Tamil

“சம்பரப் பேர்த் தானவனை - சம்பரன் என்னும் பெயரை உடைய அசுரனை; தள்ளி - அழித்து; சதமகற்கு - இந்திரனுக்கு; அன்று - முன்பு; அம்பரத்தின் - விண்ணுலகத்தின்கண்; நீங்கா அரசு அளித்த - நீங்காத அரசாட்சியைக் கொடுத்த; ஆழியாய்! - சக்கர வர்த்தியே!; அரசு உரிமை - உனது அரசாளும் உரிமையை; எம் பரத்தது ஆக்கி - எம் வசமாகச் செய்துவிட்டு; இந்தியங்கள் - ஐம்பொறிகளும், வெம்பவத்தின் - கொடிய பிறவி கெடுமாறு போல; வீய - கெட, தவம் இழைத்தவாறு - தவம் செய்தவாறு; ஈதோ - இவ்வாறு இறப்பது தானோ?

இந்திரியம் - இந்தியம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவற்றைப் புலன்வழி செல்லாது அடக்கி நோன்பு செய்தல். தவத்தால் பிறவி கெடுமாறு; தவம் செய்யும்போதே பொறிகள் வசமாகின்றன என்பதாம். “எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய, அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதே” என (1331) தயரதன் முன்னர்க் கூறியதை ஈண்டுக் கருதுக. “சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு, அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது” (322) என்பதனுள் சம்பரனை அழித்து, இந்திரனுக்குத் தயரதன் அரசு அளித்த கதை வந்துள்ளது அறிக. சதமகன் - நூறு யாகங்களைச் செய்தவன். நூறு அசுவமேத யாகங்களைச் செய்தவன் இந்திரனாவான் ஆதலின் இந்திரனுக்குச் சதமகன் என்பது ஒரு பெயர். “ஓ” இரக்கக் குறிப்பு. காசிபர் மனைவியருள் தநுவின் மகன் - தானவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Placing the right to rule in our charge, so that your senses
  2. might perish as the cruel round of births perishes — is this the penance you performed?
  3. You who long ago struck down the demon named Campara, and for the god of a hundred sacrifices
  4. secured a kingship in the sky that would never leave him, lord of the discus!'

What the poem says

Tacarataṉ had meant to hand the kingdom to his sons and retire to the forest to master his senses through penance, and so escape rebirth. Irāmaṉ asks whether this death is the penance he intended.

He also recalls his father's past glory: Tacarataṉ once killed the demon Campara and restored Intiraṉ, the god of a hundred sacrifices, to his throne in heaven. The commentary points to the earlier verses where these events are told.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'em parattatu ākki aracu urimai, intiyaṅkaḷ
vem pavattiṉ vīya tavam iḻaittavāṟu ītō?
camparap pērt tāṉavaṉait taḷḷic catamakaṟku, aṉṟu,
amparattiṉ nīṅkā aracu aḷitta āḻiyāy! '