கம்பராமாயணம் 252 · பால 5.84

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றலும் - என்று (தயரத வேந்தன் தனது குறையைக்) கூறவே; அரசே! நீ இரங்கல் - (அதைக் கேட்ட முனிவன்) அரசே! நீ வருந்தாதே; இவ்வுலகு ஒன்றுமோ உலகம் ஈரேழும் ஓம்பிடும் - இவ்வுலகம் ஒன்று மட்டுமோ பதினான்கு உலகங்களையும் பாதுகாத்து அரசாள வல்ல; வன்திறல் மைந்தரை அளிக்கும் - மிகுந்த திறமை வாய்ந்த மைந்தர்களைக் கொடுத்தருளக் கூடிய; மா மகம் - பெரிய தொரு வேள்வியினை; இன்று நீ இயற்றுதற்கு - இன்றே நீ செய்வதற்காக; ஈண்டு எழுக என்றனன் - இப்போதே எழுவாயாக என்றான்.

இரங்கல்: “அல்” எதிர்மறை விகுதி. ஒன்றுமோ: “ஓ” எதிர்மறை உணர்த்தும். வன்திறல்: ஒரு பொருட் பன்மொழி. மைந்து: வலிமை. மகம்: வேள்வி. மா என்னும் குறிப்பு, மக்கட்பேறளிக்கும் வேள்வியைக் குறித்தது. இன்று இயற்றுதற்கு நீ எழுக: விரைவும் 'அவசியமும்' காட்டிற்று. ஓம்புதல்: காத்தல். எழுக: வியங்கோள் வினைமுற்று (கட்டளைப் பொருளில் வந்தது). ஈண்டு: இப்போதே.

தனக்குப் பிறகு நாடாளவல்ல மைந்தர் இல்லையே என்று வருந்திய தயரதனுக்கு இவ்வுலகம் மட்டுமோ, ஈரேழு உலகங்களையும் ஆளவல்ல புதல்வர்களைப் பெறப் போகிறாய் எனக் கூறிய மொழிகள் இராமாவதாரத்தைப் பற்றி வசிட்டன் அறிந்திருந்தது போல, கலைக் கோட்டு முனிவனும் அறிந்திருந்தான் என்பதைக் காட்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At this he said: 'King, do not grieve! Is it this world
  2. alone? A great sacrifice that will give you sons of mighty strength
  3. to guard all the twice-seven worlds,
  4. rise now to perform it here today!'

What the poem says

The sage reassures Tacarataṉ: he will have sons who will protect not just this world but all fourteen worlds, and the sacrifice should begin at once.

The commentary notes that, like Vacittaṉ, this sage already knows that Viṣṇu is to be born as Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum, 'araca! nī iraṅkal! iv ulaku
oṉṟumō? ulakam īr ēḻum ōmpiṭum
vaṉ tiṟal maintarai aḷikkum mā makam,
iṉṟu nī iyaṟṟutaṟku eḻuka īṇṭu' eṉṟāṉ.