கம்பராமாயணம் 253 · பால 5.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும் - அந்த வேள்விக்கு உரியனவாகிய பொருள்கள் எல்லாவற்றையும்; ஏய் எனக் கொணர்ந்தனர் - ஏய் என்னும் அளவிலே பணியாட்கள் கொண்டு வந்து சேர்த்தனர்; நிருபர் வேந்தனும் - மன்னர் மன்னனான தயரதச் சக்கரவர்த்தியும்; தூய நல் புனல் படீஇ - தூய நல்ல நீரிலே நீராடி; சுருதி நூல்முறை சாய்வறத் திருத்தி - வேத நூல் முறைப்படி குறைவின்றி அமைக்கப்பட்ட; சாலைபுக்கனன் - வேள்விக்கென்று அமைக்கப்பட்ட வேள்விச் சாலை அடைந்தான்.
ஆயதற்கு: ஆய+அதற்கு (அகரம் தொக்கது). கலப்பை: பொருள்கள்; உழு கலப்பை எனவும் கூறுவர். ஏய்: விரைவை உணர்த்தி நின்றது. ஏந்தல்: அரசன். நிருபர்: மன்னர். படீஇ: படிந்து; சொல்லிசை அளபெடை வினையெச்சம் பொருளை உணர்த்தி நின்றது.
சாய்வு அற: சாய்வற; ஒரு குறையும் இல்லாமல். சாய்தல் - சுருங்குதல். புக்கனன்: புகுந்தான். திருத்திய: செப்பம் செய்யப்பட்ட. கொணர்ந்தனர் எவர்? பணியாட்கள் - தோன்றா எழுவாயாகும். கலப்பை என்பதற்குப் பொருள்கள் என்ற பொருள் உடைமையைக் “காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை” என்ற புறப்பாட்டாலும் அறியலாம்.
யாவையும் கொணர்ந்தனர் - ஏந்தலும் புனல் படீஇ - சாலை புக்கனன் என்பது முடிபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Everything required for it, all the materials,
- they brought at a word; and the chief of kings,
- having bathed in pure, good water, entered the hall
- set up without any flaw according to the Vedic scriptures.
What the poem says
Servants bring all that the sacrifice needs the moment it is asked for. Tacarataṉ bathes in purifying water and enters the sacrificial hall, built exactly as the Vedas prescribe.
The word kalappai, normally 'plough', here means 'materials' or 'implements', a sense the commentary supports from the Puṟanāṉūṟu.