கம்பராமாயணம் 254 · பால 5.86

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மும்மையும் முழங்கு அழல் - (வேள்வி செய்யத் தொடங்கி) காலை, பகல், மாலை ஆகிய மூன்று காலங்களிலும் எழுகின்ற அந்த வேள்வித் தீயில்; ஆகுதி முடுகி வழங்கி - அவிப் பொருள்களை விரைந்து கொடுத்து; ஈரறு திங்கள் வாய்த்த பின் - பன்னிரண்டு மாதங்கள் ஆன பின்பு; தாவில் வானகம் துந்துமி தழங்கின - குற்றமற்ற வானத்திலே தேவ வாத்தியங்கள் ஒலித்தன; விண்ணவர் வெளி இன்று என்ன விழுங்கினர் - தேவர்களும் இடைவெளி இல்லை எனுமாறு (வானத்தை) மறைத்து நின்றனர்.

முழங்கு அழல்: ஒலித்து எழுகின்ற வேள்வித் தீ. சதுஷ்டோமம், உந்தியம், அதிராத்திரம் ஆகிய மூன்று வேள்வி மூன்று நாட்களும் மூன்று காலத்தும் செய்யப்படுவனவாம். இவ்வாறு யாகம் நிறைவேற ஓராண்டு சென்றது என்பதால் “ஈரறு திங்கள் வாய்த்த பின்” என்றார். ஆகுதி வழங்கல்: அவிப் பொருள்களை யாகத் தீயில் பெய்தல். “வெளி இன்று என்ன விழுங்கினர்” என்பதற்கு இடம் நோக்கி, விழுங்கினர்: மறைத்தனர் என்று உரை கூறப்பட்டது.

முழங்கு அழல்: வினைத்தொகை. வாய்த்தல்: பொருந்துதல். தழங்குதல்: ஒலித்தல். தாவில்: குறைதலில்லாத (குற்றமற்ற). ஈர் அறு: ஈராறு (பன்னிரண்டு) அஃதாவது ஓராண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Feeding with quickening speed the roaring fire at all three times
  2. and pouring in the oblations, when twice six months had passed,
  3. the heavenly drums thundered; and the gods so filled
  4. the flawless sky that it seemed no open space remained.

What the poem says

For a full year the sacrifice continues, with offerings poured into the fire at dawn, noon and dusk. At its completion the heavenly drums sound, and the gods crowd into the sky in such numbers that it seems to have no empty space left.

'Swallowed the sky' means they hid it entirely.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḻaṅku aḻal mummaiyum muṭuki, ākuti
vaḻaṅkiyē, īr aṟu tiṅkaḷ vāytta piṉ,
taḻaṅkiṉa tuntumi; tā il vāṉakam
viḻuṅkiṉar viṇṇavar veḷi iṉṟu eṉṉavē.