கம்பராமாயணம் 255 · பால 5.87

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முகம் மலர் ஒளிர் தர மொய்த்து, வான் உளோர்
அகம் விரை நறு மலர் தூவி ஆர்த்து எழத்,
தகவு உடை முனியும், அத் தழலின் நாப் பண் ஏ
மகவு அருள் ஆகுதி வழங்கினான், அரோ.

பொருள் · Meaning in Tamil

வான் உளோர் முகமலர் ஒளிதர மொய்த்து - வானுலகில் வாழுகின்ற தேவர்கள் எல்லாம் தங்கள் முகங்களாகிய தாமரை மலர்கள் ஒளி தருமாறு அங்கு வந்து நெருங்கி நின்று; அகவிரை நறுமலர் தூவி - உள்ளே மணம் மிகுந்த மலர்களைச் சொரிந்து; ஆர்த்து எழ - ஆரவாரம் செய்து எழ; தகவு உடை முனியும் - தகுதியுடைய அந்தக் கலைக்கோட்டு முனிவனும்; தழலின் நாப்பண் - அந்த வேள்வித் தீயின் நடு இடத்திலே; மகவருள் ஆகுதி வழங்கினான் - பிள்ளைப் பேற்றைத் தரவல்ல ஆகுதியைக் கொடுத்தான்.

முகமலர்: முகமாகிய மலர் என்பதால் உருவகம். மொய்த்தல்: நெருங்குதல். விரை: மணம். நறுமலர்: பண்புத்தொகை. தூவி என்பதில் 'தூ' பகுதி. நாப்பண்: நடுவிடம். ஆர்த்து: ஆரவாரித்து. ஆகுதி: இங்குப் 'பூர்ணாகுதி' யாம். தகவு: தகுதி (வேள்வியை நடைபெறச் செய்யும் தகுதியாம்). அரோ: அசை. உள்ளோர்: உளோர் எனத் தொகுக்கப்பட்டது. வானுளோர் - தூவி - மொய்த்து - எழ - முனியும் - ஆகுதி வழங்கினான் என இயைக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their lotus faces shining, the dwellers of heaven thronged,
  2. strewing fragrant flowers sweet to their hearts, and rose with a roar;
  3. and the worthy sage, into the very centre of that fire,
  4. poured the oblation that grants children.

What the poem says

The gods crowd round, their faces like shining lotuses, scattering flowers and shouting with joy, as Kalaikkōṭṭu Muṉivaṉ makes the final offering (pūrṇāhuti) into the heart of the sacred fire, the oblation meant to bring Tacarataṉ sons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mukamalar oḷitara moyttu, vāṉ uḷōr
aka virai naṟu malar tūvi ārttu eḻa,
takavuṭai muṉiyum, at taḻaliṉ nāppaṇē
maka aruḷ ākuti vaḻaṅkiṉāṉarō.