கம்பராமாயணம் 256 · பால 5.88

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அ இடை கனலில் நின்று, அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று, சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணுமாய்,
ஏயெனப், பூதம் ஒன்று, எழுந்தது, ஏந்தியே.

பொருள் · Meaning in Tamil

ஆயிடை கனலின் நின்று - அப்போது அந்த வேள்வித் தீயிலிருந்து; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் - தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; பூதம் ஒன்று - ஒரு பூதமானது; அம்பொன் தட்டம் - அழகிய ஒரு பொன் தட்டத்தின் மேலே; தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; ஏந்தி ஏயென எழுந்தது - தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

அ+இடை: ஆயிடை (செய்யுள் விகாரம்). மீ: மேலே. சுதை: அமுதம். பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே பாயசத்தை ஏந்தி அப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று). பூதம்: தோற்றம் என்னும் பொருள் கொண்ட வட மொழிச் சொல்லாம். ஏய்: ஏய் எனச் சொல்வதற்குள் (ஒரு அளவைக் குறிப்பு). கம்பர் இச்சொல்லைப் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then from the fire, on a beautiful golden platter,
  2. a ball of food like pure, fine nectar, a being
  3. with hair like blazing flame and with red eyes
  4. rose in an instant, holding it up.

What the poem says

At once a being rises out of the fire, its hair like flames and its eyes red, carrying a golden dish of food like nectar. Vālmīki describes this as pāyasam, sweet rice pudding.

The word pūtam here simply means 'a being that appeared'. 'Ēy-eṉa', 'in the time it takes to say ēy', is a favourite expression of Kampaṉ's for 'in an instant'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai kaṉaliṉniṉṟu, am poṉ taṭṭam mīt
tūya nal cutai nikar piṇṭam oṉṟu, cūḻ
tī erip paṅkiyum civanta kaṇṇum āy,
ēyeṉa, pūtam oṉṟu, eḻuntatu, ēntiyē.