கம்பராமாயணம் 257 · பால 5.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூதம் தரை மிசை வைத்தது - (அவ்வாறு தோன்றிய) அந்தப் பூதம் அப்பொன் தட்டத்தைத் தரையின் மேல் வைத்தது; மறித்தும் அவ்வழி தைத்தது - திரும்பவும் வந்த விதமே அந்த வேள்வித் தீயினுள் சென்று மறைந்தது; அத்தவனும் உய்த்த நல் அமிர்தினை - அந்தக் கலைக் கோட்டு முனிவனும் பூதம் கொடுத்த நல்ல அமுதுப் பிண்டத்தை; உரிய மாதர்கட்கு - உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு; அத்தகு மரபினால் - மூத்தவள், இளையவள் என்ற முறைப்படியே; அளித்தியால் என்றான் - கொடுப்பாயாக என்று கூறினான்.
தரை மிசை: வேள்விச் சாலையின் தரை மீது. அவ்வழி: அந்த வழியே. தைத்தல்: குளித்தல் என்பதொரு பொருளும் உண்டு. வேள்வித் தீயிலே சென்று குளித்தது என்பதும் ஒரு பொருள். 'அம்பு தைத்தது' என்பது போல. உய்த்த: சேர்த்த, வைத்த, செலுத்திய என்ற பொருள் உடையது. இங்குப் பூதம் தரைமிசை வைத்த அமிர்தம் என்பதால் “வைத்து” என்று கொள்ளுதல் பொருந்தும். 'அளித்தியால்' இங்கு 'ஆல்' அசை. அளித்தி: கொடு. அத்தகு மரபின்: மரபாவது மூத்தவளுக்கு முதலிலும், அதன் பின் முறைப்படி வழங்குதல் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It set it on the ground, and by that same way
- the being sank back again; and the sage said to the king,
- 'This good nectar that has been brought, to your rightful queens,
- in the fitting order, you shall give.'
What the poem says
The fiery being sets down the dish and vanishes back into the flames. The sage tells Tacarataṉ to share the nectar-like food among his chief queens in proper order of seniority, eldest first.