கம்பராமாயணம் 258 · பால 5.90

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாமுனி அருள் வழி மன்னர் மன்னவன்
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமர் ஒண் கௌசலை கரத்தின் ஓர் பகிர்
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ.

பொருள் · Meaning in Tamil

மாமுனி அருள் வழி - மாமுனிவரான கலைக்கோட்டு முனிவர் அருள் செய்தபடியே; மன்னர் மன்னவன் - அரசர்க்கு அரசனான தயரதன்; தூமமென் சுரிகுழல் தொண்டைத் தூயவாய்க் காமருகோசலை - அகிற் புகையூட்டப்பட்ட கடை சுருண்ட கூந்தலையும் தொண்டைக் கனி போன்ற சிவந்ததான வாயையும் உடைய அழகிய கோசலையினது; கரத்தில் ஓர் பகிர் - கைகளிலே அந்த அமுதத்தின் ஒரு பகுதியை; சங்கம் ஆர்த்தெழ தாமுற அளித்தனன் - சங்குகள் ஒலிக்கக் கொடுத்தான்; அருள்வழி - அருளின் வழியே (அருள் செய்தபடியே).

தொண்டை: கொவ்வைப் பழம். வாய்: அதரம். காமர்: அழகு. காமரு என உகரச் சாரியை பெற்றது. கரம்: கை. பகிர்: பகுதி. தாமுற என்பதில் தாம் அசை. உறு: பொருந்த. பகிர்: சரி பாதியுமாம். சுரிகுழல்: வினைத்தொகை. “மன்னவன் - சங்கம் ஆர்த்தெழ - கோசலை கரத்தில் ஓர் பகிர் அளித்தனன்” என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great sage directed, the king of kings,
  2. into the hands of lovely Kōcalai, whose soft curling hair was scented with smoke
  3. of aloe wood and whose pure mouth was red as the toṇṭai fruit,
  4. gave a portion, as conches rose up sounding.

What the poem says

Tacarataṉ gives the first share to Kōcalai, his senior queen, as conches sound. Her hair is perfumed with aloe-wood smoke and her lips are red like the toṇṭai fruit, the ivy gourd.

The commentary notes that the 'portion' may mean exactly half.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māmuṉi aruḷ vaḻi maṉṉarmaṉṉavaṉ
tūma meṉ curi kuḻal toṇṭait tūya vāyk
kāmaru kōcalai karattil ōr pakir
tām uṟa aḷittaṉaṉ caṅkam ārttu eḻa.