கம்பராமாயணம் 259 · பால 5.91

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கைகயன் தனயை தன் கரத்தும், அ முறை
செய்கையின், அளித்தனன், தேவர் ஆர்த்து எழப்,
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னன் ஏ.

பொருள் · Meaning in Tamil

பொய்கையும் நதிகளும் பொழிலும் - பொய்கைகளிலும், ஆறுகளிலும், சோலைகளிலும்; ஓதிமம் வைகுறு - அன்னப் பறவைகள் வாழ்கின்ற; கோசல மன்னர் மன்னன் - கோசல நாட்டின் பேரரசனான தசரதன்; கைகயன் தனையைதன் கரத்தும் - கேகய நாட்டு மன்னனது மகளான கைகேயியின் கைகளிலும்; அம்முறைச் செய்கையின் - முன் சொன்ன முறையான செய்கையால்; தேவர் ஆர்த்து எழ அளித்தனன் - தேவர்கள் ஆரவாரித்து எழ அந்த அமுதப் பகுதியைக் கொடுத்தான்.

கைகயன்: கேகய நாட்டரசன். தனையை: மகள். “அம்முறைச் செய்கையின்” என்பதற்கு “முறையினும் செய்கையினும்” என்று பொருள் கூறுவர். முறையாவது முனிவர் கூறிய “தருமரபு”; செய்கையாவது கோசலைக்குத் தந்த அம்முறைச் செய்கையாக என்று கூறுதல் சிறப்பு. ஓதிமம்: அன்னம். வைகுறு: 'உறு' துணை வினை. தசரதன் ஆண்ட நாடு “கோசலம்” என்னும் பெயர்கொண்டது என்று குறிப்பிடுகிறார்.

கோசலைக்கு ஈந்த முறையிலேயே கைகேயிக்கும் கொடுத்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the hands of Kaikēyi, daughter of the Kēkaya king, too, by the same
  2. order and act, he gave it, while the gods rose up roaring:
  3. the king of kings of Kōcalam, where swans dwell
  4. in pools and rivers and groves.

What the poem says

Next Tacarataṉ gives a share, in the same way, to Kaikēyi, daughter of the king of Kēkaya. The gods cheer.

Tacarataṉ's kingdom, Kōcalam (Kosala), is pictured as a land of pools, rivers and groves where swans live.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaikayaṉ taṉaiyaitaṉ karattum, am muṟaic
ceykaiyiṉ, aḷittaṉaṉ, tēvar ārttu eḻa,
poykaiyum natikaḷum poḻilum ōtimam
vaikuṟu kōcala maṉṉarmaṉṉaṉē.