கம்பராமாயணம் 2523 · அயோத்தியா 12.74

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

“சீலமும் - நல்லொழுக்கமும்; தருமமும் - அறமும்; சிதைவு இல் - சிதைதல் இல்லாத; செய்கையாய்! - செயலை உடைய இராமனே; சூலமும், திகிரியும், சொல்லும் தாங்கிய - சூலத்தையும், சக்கரத்தையும், வேதத்தையும் தரித்திருக்கிற, மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் - எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாய் வந்து அருளுகின்ற முப்பரம் பொருளுக்கு ஆனாலும்; காலம் என்று ஒரு வலை - காலத் தத்துவம் என்கின்ற ஒரு வலையை; கடக்கல் ஆகுமோ - கடத்தல் இயலுமா? (இயலாது என்றபடி).

காலமும் கணக்கும் நீத்த காரணன் முத்தொழில் செய்கிறபோது காலவலைக் குட்பட்டவனாகவே செய்கிறான் ஆதலின் காலத்தைக் கடத்தல் இயலாது என்றதாம். செயல் என்பது காலத்தோடு கூடியது ஆகலான் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் செயல் செய்வார் மூவரும் காலத்திற்குட்பட்டவரேயாம் என்க. சூலம் சிவனையும், திகிரி திருமாலையும், சொல் எனும் வேதம் பிரமனையும் காட்டியது. முன்னர் ‘உருளும் நேமியும் ஒண்கவர் எஃகமும், மருள் இல்வாணியும் வல்லவர் மூவர்க்கும்’ என்றதும், (1417) காண்க. ‘மூலம் வந்து உதவிய’ என்பதற்கு மூலமாகிய பரம்பொருள் உள்புகுந்து உதவிய மூன்று தேவர்கள் எனப் பொருள் உரைத்தலும் ஒன்று. ‘சொல்’ என்பது வேதம். நாமகள் என்று த் இரண்டுக்கும் உரியவன் பிரமன் ஆதலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You whose deeds never break from virtue and dharma!
  2. Even for the Three who bear the trident, the discus and the Word,
  3. who came as the source of all and sustain it,
  4. can the one net called Time be crossed?'

What the poem says

Vatiṭṭaṉ says that not even the three great gods escape Time: Civaṉ with his trident, Viṣṇu with his discus and Piramaṉ with the Veda. Every act happens in time, and creation, preservation and destruction are acts, so the gods who perform them are caught in Time's net too.

A second reading takes 'the source' to be the Supreme Being who enters and works through these three gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''cīlamum, tarumamum citaivu il ceykaiyāy!
cūlamum, tikiriyum, collum tāṅkiya,
mūlam vantu utaviya, mūvarkku āyiṉum,
kālam eṉṟu oru valai kaṭakkal ākumō? ''