கம்பராமாயணம் 2543 · அயோத்தியா 12.94

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சேனை வீரரும் , திரு நல் மா நகர்
மால் நை மாந்தரும் , மற்று உளோர்களும் ,
ஏனை வேந்தரும் , பிறரும் , யாவரும்
கோனை எய்தினார் , குறையும் சிந்தையார் .

பொருள் · Meaning in Tamil

சேனை வீரரும் - படைவீரர்களும்; திருநல் மாநகர் - செல்வம் நிறைந்த நல்ல பெரிய அயோத்தி நகரில் உள்ள; மான மாந்தரும் - பெருமை படைத்தவர்களும்; மற்றுளோர்களும் - வேறுள்ளவரும், ஏனை வேந்தரும் - பிற அரசர்களும்; பிறரும் யாவரும் -; கோனை - இராமனை; குறையும் சிந்தையார் - அழிந்து வருந்தும் மனம் உடையவராம்; எய்தினார் - வந்தடைந்தார்கள்.

மான மாந்தர் என்பதற்கு முன்பு கூறியாங்கு அமைச்சர்கள் எனினும் அமையும். அனைவரும் துக்கத்தில் மூழ்கியவராய் இராமனை நெருங்கிவந்து சேர்ந்தார்கள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The soldiers of the army, and the honoured men
  2. of the great and blessed city, and all the rest,
  3. the other kings and others, every one of them,
  4. came to their lord with sinking hearts.

What the poem says

Everyone who came from Ayōttī now gathers around Irāmaṉ, their king: soldiers, the leading citizens or ministers, the allied kings and all the rest. Every one of them is heavy-hearted with grief for the dead king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēṉai vīrarum, tiru nal mā nakar
māṉa māntarum, maṟṟuḷōrkaḷum,
ēṉai vēntarum, piṟarum, yāvarum
kōṉai eytiṉār, kuṟaiyum cintaiyār.