கம்பராமாயணம் 2542 · அயோத்தியா 12.93

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பின் அவ் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன் அனார்களும் சனகன் பூவையைத்
துன்னி , மார்பு உறத் தொடர்ந்து புல்லினார் ,
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் .

பொருள் · Meaning in Tamil

பின்னர் - பிறகு; வீரரைப் பெற்ற பெற்றி அப்பொன் அனார்களும் - இராமன் முதலிய நால்வரையும் பெற்ற தன்மையுடைய அந்தப் பொன்போன்ற அரசமாதேவியர் மூவரும்; சனகன் பூவையை - சனகன் மகளாகிய சானகியை; துன்னி - நெருங்க; மார்பு உறத் தொடர்ந்து புல்லினார் - பற்றிக்கொண்டு மார்பிற் கட்டியணைத்து; இன்னல் வேலை புக்கு - துன்பக் கடலிற் புகுந்து; இழிந்து - உள்ளே இறங்கி; அழுந்துவார் - அமிழ்பவராக ஆனார்கள்.

சனகன் மகள் சானகி, பூவை - உவமவாகுபெயர். பொன் போன்றார் - தேவியர்; போற்றிப் பாதுகாக்கப்படுபவர் என்னும் பொருளில். தழுவிய அளவில் துயரம் மீக்கூர்ந்தபடியை இவ்வாறு உரைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then those golden ladies, who had the glory
  2. of having borne the heroes, drew close to Caṉakaṉ's
  3. little myna and clung to her, holding her to their breasts,
  4. and went down into the sea of sorrow and sank.

What the poem says

The three queens then go to Cītai, Caṉakaṉ's daughter, called here by the pet image of a myna bird. They hold her tightly to their breasts, and in that embrace their grief deepens until they seem to sink into a sea of sorrow.

The queens are called 'golden' as women treasured and carefully guarded, as gold is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉar vīraraip peṟṟa peṟṟi ap
poṉ aṉārkaḷum caṉakaṉ pūvaiyait
tuṉṉi, mārpu uṟat toṭarntu pulliṉār,
iṉṉal vēlai pukku iḻintu aḻuntuvār.