கம்பராமாயணம் 2545 · அயோத்தியா 12.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்று தீர்ந்தபின் - அன்றையநாள் கழிந்தபிறகு (மறுநாள்); அரச வேலையும் - அரசர் கூட்டமும்; துன்று செஞ்சடைத் தவரும் - நெருங்கிய சிவந்த சடையினை உடைய முனிவர்களும்; சுற்றமும் - சுற்றத்தினரும், தன் துணைத் திருத் தம்பிமார்களும் - தன்னுடைய இணைபிரியாத சீரிய இளவல்களும்; சென்று சூழ - சென்று சுற்றிலும் இருக்க; ஆண்டு இருந்த - அங்கே வீற்றிருந்த; செம்மல் - தலைமையோனாய இராமன்...(மேல் முடியும்)
அரச வேலை - அரசர் வேலை. ஈறுகெட்டது. வேலை - கடல் என்பது ஈண்டுக் கூட்டத்தை உணர்த்தியது. உருவகம். மூவரையும் ஒருசேரத் தம்பிமார்கள் என்றார். செம்மல்தான் “பரிந்து கூறினான்” (2470) என முடியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When that day was over, with the sea of kings,
- the ascetics with thick, red matted hair, and his kin,
- and his own dear brothers, his companions,
- gathered round him, the noble one, seated there...
What the poem says
The next day Irāmaṉ sits in assembly, surrounded by a 'sea' of kings, by ascetics with matted reddish hair, by his relatives and by his three brothers.
The sentence continues into the following verse, where Irāmaṉ speaks to Paratan.