கம்பராமாயணம் 2569 · அயோத்தியா 12.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“அரி - திருமால்; ஓர் கேழல் ஆய் - ஒப்பற்ற ஆதிவராக மூர்த்தியாய்; உளைவு அரும் - வருந்துதல் இல்லாத; பெருமை ஓர் எயிற்றின் உள்புரை - பெருமையுடைய ஒப்பற்ற தந்தத்தின் உள்ளிடத்தில்; வளர் இளம் பிறையிடை - வளரும் தன்மை உடைய இளம்பிறைச் சந்திரனிடத்தில்; மறுவின் தோன்ற - களங்கம் போலத் தோன்றும்படி; கிளர் அகன் புனலுள் நின்று - மிக்கு எழுகின்ற அகன்ற பிரளய கால வெள்ள நீரில் இருந்து; இளை எனும் திருவினை - பூமி என்கின்ற பெண்ணை; ஏந்தினான் - எடுத்தருளினான்.
பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமத் நாராயணன் ஊழிக்கடலில் மூழ்கியிருந்த பூதேவியை மேலே எடுக்க வராக அவதாரத்தைச் செய்தருளி, தன் கொம்பின் நுனியாலே பூமியை மேல் எடுத்து நிறுத்தி யருளினான் என்கின்ற கதை இதனுள் கூறப்பட்டது. இதனால் இப்போது நடப்பது ஆதிவராக கல்பம் ஆயிற்று. இளை - பூமி; திரு என்கின்ற சொல் பெண் என்னும் பொதுப் பொருளில் நின்றது. இளை எனும் திரு, பூதேவியாம். கோடு பிறையும் பூமி அதில் உள்ள களங்கமும் போலும் என்று உவமித்தார். “நிறக்கும் செழுஞ்சுடர்க் கோடும், இப்பாரும், நிசாமுகத்துச் சிறக்கும் பிறையும், களங்கமும் போலும் எனில், சிறுகண், மறக்குஞ்சரம் செற்றமாயோன், அரங்கன் வராகம் - அது ஆய்ப், பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே” எனப் (திருவரங்கத்து மாலை. 28) பின்னுள்ளோரும் இவ்வுவமையை இவ்வாறே அனுபவிப்பதை ஓர்ந்துணர்க. ‘அரோ’ அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'From within the vast, surging waters, Hari, taking the form of a boar,
- lifted up the goddess called Iḷai, the Earth,
- so that within the hollow of one tusk of tireless might she appeared
- like the dark mark on a growing young crescent moon.'
What the poem says
Vaciṭṭaṉ begins a long account of the origins of Irāmaṉ's family, starting with creation itself. At the end of a cosmic dissolution, Viṣṇu took the form of the primal boar and raised the Earth goddess out of the flood on the tip of his tusk.
Against the white curve of the tusk, the Earth looked like the dark mark on the crescent moon. A later Tamil poem on Srirangam uses the same comparison. The present world-age is named after this boar.