கம்பராமாயணம் 2568 · அயோத்தியா 12.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒள்ளியோன் - சீரிய அறிவாளனாகிய இராமன்; இனைய எல்லாம் உரைத்தலும் - இத்தகைய சொற்களையெல்லாம் எடுத்துக் கூறுதலும்; உரைக்கலுற்ற - அவனுக்குப் பதில் கூறுதற்குத் தொடங்கிய; பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை - பள்ளத்தில் தங்கிய நீர்ப் பெருக்கை போன்ற (குணக்கடலாகிய) பரதனை; விலக்கி - (பேசவொண்ணாமல்) தடுத்து நிறுத்தி; வசிட்ட மாமுனிவன் - வசிட்டனாகிய பெருமையுற்ற முனிவன்; “வள்ளியோய் - வள்ளல் தன்மை உடைய இராமனே!; கேட்டி” - கேட்பாயாக; என்னா - என்று அவனை அழைத்து; “பண்டு தெள்ளிய குலத்தோர் செய்கை - முன்னைய (சூரிய) குலத்தார்களுடைய செயல்களை எல்லாம்; சிக்கு அற - ஐயம்திரிபின்றி; சிந்தை நோக்கி - அகத்தே உணர்ந்து; சொன்னான் - சொல்லத் தொடங்கினான்.
“தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும், பள்ளம் எனும் தகையானை” (657) என்று முன்னும் பரதனைக் கூறினார் ஆதலின், “பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதன்” என்றார். ஒள்ளியோன்; ஒண்மை - அறிவுடைமை; நுண்மாண் நுழைபுலம் எனலாம். “ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்” “உலகம் தழீஇயது ஒட்பம்” (குறள். 425, 714.) என்பன காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the wise one had said all this, Paratan, about to reply,
- like a flood of water gathered in a hollow, was held back; and the deeds of old
- of that pure line, surveying them in his mind free of all tangle,
- 'Generous one, listen,' the great sage Vaciṭṭaṉ said.
What the poem says
Paratan is about to answer, but the sage Vaciṭṭaṉ stops him and speaks to Irāmaṉ himself, having reviewed in his mind the customs of their ancient Solar dynasty.
The poet compares Paratan to a flood of water filling a hollow. Earlier, he was described as the low ground into which the single great river of justice flows: all virtue gathers in him.