கம்பராமாயணம் 2571 · அயோத்தியா 12.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏற்ற - அறிதுயில் செய்தலை ஏற்றுக்கொண்ட; இத் தன்மையின் - இத்தன்மையினாலே; அமரர்க்கு இன் அமுது ஊற்றுடைக் கடல்வணன் - தேவர்களுக்கு இனிய அமுதத்தைச் சொரிதலுடைய கடல் போலும் கரு நிறமுடைய திருமால்; உந்தி - தன் திருநாபியினாலே; உந்திய - தோற்றுவித்த; நூற்று இதழ்க் கமலத்தில் - நூறு இதழ்களை உடைய தாமரை மலரிலிருந்து; முதல்வன் - எல்லாப் பொருள்களுக்கும் மூலமானவனாகிய பிரமன்; நொய்தின் யாவையும் தோற்றுவித்து உதவிட - எளிதில் எல்லாம் பொருள்களையும் உண்டாக்கி உலகிற்கு உதவ வேண்டி; தோன்றினான் - வெளிப்பட்டருளினான்.
பிரளய காலத்து ஒடுங்கிய பிரமன் தான் ஒடுங்கிய நாபிக் கமலத்தில் இருந்து மீண்டும் வெளிப்படுவான் என்பது படைப்புக் கொள்கை. திருமாலின் நாபிக் கமலத்தில் பிரமன் வெளிப்பட்டுப் படைப்புத் தொழிலை நடத்தத் தொடங்கினான் என்றவாறாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Then, in this state he had taken on, from the navel of him
- who is dark as the sea, the spring of sweet nectar for the gods, there rose
- a lotus of a hundred petals, and in it, to bring forth
- all things with ease and give them being, the First One appeared.'
What the poem says
As Viṣṇu sleeps on the cosmic waters, a hundred-petalled lotus grows from his navel, and from it Piramaṉ, the creator, emerges to bring all things into being again.
Viṣṇu is described as dark like the sea and as the source of the nectar of immortality, which the gods obtained by churning the ocean.