கம்பராமாயணம் 2572 · அயோத்தியா 12.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் - அத்திசைமுகன்; அன்று - அக்காலத்து; உலகினை அளிக்க - உலகத்தைப் படைக்க; முதல் ஆகியது - முதலில் உண்டாகியது; உன் தனிக் குலம் - உன்னுடைய ஒப்பற்ற சூரிய குலம்; உள்ள வேந்தர்கள் - இந்தக் குலத்தில் தோன்றிய அரசர்களும்; முறை இகந்து உளார் - முறைமை தவறியவர்; இன்று அளவினும் - இன்றுவரையிலும்; இலை - இல்லை; இனம் ஒன்று உரை உளது - இன்னும் ஒரு வார்த்தை இருக்கிறது; உணரக் கேட்டி - தெரியக் கேட்பாயாக.
“ஆதிமால் அமலன் நாபிக்கமலத் தயனுதித்தயன் மரீசியெனும் அண்ணலை அளித்த பரிசும், காதல் கூர்தரு மரீஇசி மகனாகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும்” எனக் (கலிங்கத்துப். இராக. 9) கூறுமாறு திருமால் - அயன் - மரீஇசி, காசிபன் - சூரியன் எனக் குலமுறை காணுதலின் முதற்றோன்றிய குலமாதல் அறிக. நீ மூத்தவனாதலின் முறை இகவாமல் நீயே அரசு புரிதல் வேண்டும் என்பது வசிட்டன் கூற்றாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When he then created the world, the first thing to come into being
- was your peerless line; and of all the kings who have been in it,
- not one up to this day has broken the rightful order;
- and there is one thing more to say: hear it and understand.'
What the poem says
When Piramaṉ began to create, the first dynasty to arise was Irāmaṉ's own Solar line, descended from Viṣṇu through Piramaṉ, the sage Marīci, Kaśyapa and the Sun. The commentary cites the Kaliṅkattupparaṇi for this genealogy.
In all that time no king of the line has ever broken the rule that the eldest son reigns. Vaciṭṭaṉ's point is that Irāmaṉ, as the eldest, must rule, and he has one more argument to add.