கம்பராமாயணம் 2573 · அயோத்தியா 12.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மத இயல் களிற்றினாய்” - செருக்குற்ற இயல்பினை உடைய ஆண் யானையை உடையவனே!; மறுவில் விஞ்சைகள் - குற்றமற்ற கல்விகளை; பதவிய இருமையும் பயக்க - பக்குவப்பட இம்மை மறுமை இரண்டிலும் பயன் கொள்ளுமாறு; பண்பினால் உதவிய - அன்போடு கற்பித்துக் கொடுத்த; ஒருவனே - ஆசிரியனே; இத இயல் இயற்றிய - (ஒருவனுக்கு) நன்மைதரும் இயல்பினைச் செய்த; குரவர் யாரினும் உயரும்” - எல்லாரினும் மேம்படுவான்; என்பர் - என்று கூறுவார்கள்.
இராமன் தந்தை தாயர் குரவர் யாரினும் உயர்ந்தவர் என முன் கூறியவதனால், இங்கே ஆசிரியரே குரவர் யாரினும் உயர்ந்தவர் என வசிட்டன் கூறி, ஆசிரியராகிய தம் வார்த்தையை மறுத்தல் வடாது என்பார் ஆயினார். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” (வெற்றிவேற்கை. 1) என்பதும் கருதுக. பதவிய - பதவியாக உள்ள என்றுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Above all the elders who have done one good,
- you whose elephants run with ichor, "the one who flawless learning,
- ripened to bear its fruit in both worlds, kindly
- imparted, he alone stands highest": so they say.'
What the poem says
Irāmaṉ had argued that father and mother come first among the elders to be obeyed. Vaciṭṭaṉ replies that tradition ranks the teacher highest of all: the one who lovingly passes on flawless learning that bears fruit in this life and the next.
The commentary quotes the Veṟṟivēṟkai, which says that whoever taught you your letters is as God to you. Vaciṭṭaṉ is Irāmaṉ's teacher, so his word should not be refused.