கம்பராமாயணம் 2574 · அயோத்தியா 12.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“என்றலால் - (ஆசிரியரே மேம்பட்ட குரவர் என்று கூறுவதால்); ஐய! - இராமனே; யான் உனை எடுத்து - நான் உன்னை வளர்த்து; விஞ்சைகள் - கல்விகள்; ஒன்று அலாதன பல - மிகப் பல; உதவிற்று - கற்பித்தது; உண்மை -; (ஆகவே) “இன்று எனது ஆணை - இன்று என்னுடைய கட்டளையை; அன்று எனாது” - அல்ல என்று மறுக்காமல்; உனக்குரிய நாடு - உனக்கு உரிமையுள்ள நாட்டினை; போந்து - அடைந்து; நன்று அளி - நன்றாகக் காப்பாற்று; என்றான் - என்று கூறினான்.
குரவர் யாரினும் ஆசிரியரே மேலோர்; அவர் வார்த்தையை மறுத்தல் கூடாது, மறுத்தல் அறநெறியன்று. யான் உன் ஆசிரியன் என்பது உண்மை. என் வார்த்தை மறாது அரசாள்க என்றான் வசிட்டன். “மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்” (660) என்பதை ஈண்டு நினைக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Because it is said so, and since I raised you and gave you
- learning of many kinds, not one alone, which is the truth,
- do not refuse my command today, my dear; you
- go back and protect well the land that is yours,' he said.
What the poem says
Vaciṭṭaṉ makes his claim. He brought Irāmaṉ up and taught him many branches of learning, as the epic said earlier when it first introduced him. As Irāmaṉ's teacher, he is the highest of his elders.
So he commands Irāmaṉ not to refuse him, but to return and govern the kingdom that is rightfully his.