கம்பராமாயணம் 264 · பால 5.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செய்ம்முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே - செய்ய வேண்டிய முறைப்படி எல்லாக் கடமைகளையும் தவறுதல் இல்லாமல்; மெய் முறைக் கடவுளர்க்கு ஈந்து - உண்மையான உரிமையுடைய தெய்வங்களுக்குக் கொடுத்து; விண் உளோர்க்கும் அம்முறை அளித்து - வானுலகிலுள்ள தேவர்களுக்கும் அந்தந்த முறைப்படி கொடுத்து; நீடு அந்தணாளர்க்கும் - நிறைந்த அந்தணர்களுக்கும்; கனகமாரி கைம் முறை வழங்கினன் - பொன்மழையைக் கையின் முறைப்படி வழங்கினான்.
செய்ம்முறை: அவசியம் செய்யப்பட வேண்டிய முறைகள். கடன்முறை: மரியாதை முறைகள். மெய்ம் முறைக்கடவுளர்: குல தெய்வங்கள் அல்லது உண்மையும் அதிகாரமும் உடைய தேவதைகள். விண்ணுளோர்: தேவர்கள். கைம்முறை: கைப்பழக்கம். “கனக மாரி” என்பதற்கேற்ப வழங்கினன் என்ற நயம் கருதத்தக்கது. திறம்பல்: தவறுதல் (தொழிற்பெயர்). நீடு என்பதற்கு நிறைந்த புகழ்ப் பெருமைகளை உடைய என்பதும் பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Without swerving from the rites due in the proper order,
- he gave to the gods of true right their share, to those in heaven
- gave in that same way, and to the eminent Brahmins too
- he gave by his hand's custom a rain of gold.
What the poem says
After the sacrifice Tacarataṉ distributes the customary gifts: offerings to the family deities and to the gods, and to the Brahmins a 'rain of gold'.
The commentary notes how well 'by his hand's custom', meaning his habitual generosity, fits the image of gold pouring like rain.