கம்பராமாயணம் 263 · பால 5.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முருடு ஒடு பல்இயம் - மத்தளத்துடன் கூடிய பலவகை வாத்தியங்களும்; முழங்கி ஆர்த்தன - மிக முழங்கி ஒலிக்கலாயின; இருள் தரும் உலகமும் - (அரக்கரால்) இருளடைந்திருந்த உலக மக்களெல்லாம்; இடரின் நீங்கின - தங்கள் துன்பங்களிலிருந்து நீங்கினர்; தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி - தெளிவைத் தரும் வேள்வியின் கடமைகள் யாவும் செய்து தீர்ந்தபின்னர்; அரசன் அருள் தரும் அவையில் வந்து எய்தினான் - அரசனாகிய தயரதன் அருள் பொருந்திய அரசவைக்குச் சென்று சேர்ந்தான்.
'முருடு': ஒருவகைத் தோற் கருவி (மத்தளம் என்பர்). இயம்: வாத்தியம். முழங்கி ஆர்த்தல்: மிக்கொலித்தல். இருள்: அரக்கரால் உண்டான இடர். தெருள்: தெளிவு. மகப்பேறு உண்டு என்னும் தெளிவைத் தந்த வேள்வி என்பது பொருள். அருள் தரும் அவை: அருள்மிக்க அறிஞர் பேரவை. அருள் உணர்ச்சி தரக்கூடிய அவை எனினுமாம். 'உழி': இடம் (காலம்) பொருளைச் சுட்டி நின்றது. உலகம்: இடவாகு பெயராக மக்களை உணர்த்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many instruments, with drums, thundered and roared;
- the world held in darkness was freed of its distress;
- when the duties of the sacrifice that brings clarity were done,
- the king came to the assembly that bestows grace.
What the poem says
With the sacrifice complete, music sounds everywhere, and the world, darkened by the rākṣasas, feels its suffering lifting. The sacrifice brings 'clarity' because it has given the certainty that sons will be born.
Tacarataṉ goes to his assembly of wise and gracious counsellors.