கம்பராமாயணம் 262 · பால 5.94

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
ஆம் புரை ஆவுதி பிறவும், அந்தணன்
ஓம்பிட, முடிந்த பின், உலகு காவலன்
ஏம்பலொடு எழுந்தனன் யாரும் ஏத்தவே.

பொருள் · Meaning in Tamil

வாம்பரி வேள்வியும் - தாவிச் செல்லும் குதிரை வேள்வியான அசுவமேத யாகத்தையும்; மகாரை நல்குவது ஆம் புரை ஆகுதி பிறவும் - மக்கட் பேற்றையளிக்கும் உயர்ந்த ஆகுதியையும் அதற்கேற்ற பிற வழிபாடுகளையும்; அந்தணன் ஓம்பிட முடித்தபின் - கலைக்கோட்டு முனிவன் செய்து முடித்தபின்; உலகு காவலன் - நாடாளும் வேந்தனாகிய தயரதன்; யாரும் ஏத்தவே ஏம்பலோடு எழுந்தனன் - எல்லோரும் போற்றும்படி மகிழ்வோடு எழுந்தான்.

வேள்வி முடிந்தபின் மன்னன் வேத்தவைக்கு வருதலைக் கூறுவது இப்பாட்டு. வாம் - பரி: வாவும் என்பதன் இடை குறைத்து வாம் என நின்றது. வாவுதல்: தாவிச் செல்லுதல். மகார்: புத்திரர் (மகன் என்பதன் பன்மை). புரை: உயர்ச்சி. ஓம்பிட: 'இடு' ஆற்றல் உணர்த்தும் துணைவினையாம்; காவலன்: காத்தலின் வல்லவன். ஏம்பல்: மகிழ்ச்சி.

அந்தணன் ஆகுதி முடித்தபின் - காவலன் யாரும் ஏத்த எழுந்தனன் என்பது முடிவு. பரி வேள்வி: அசுவமேத யாகம். பிறவும்: மகவருள் ஆகுதியுடன் தொடர்புடைய பிற பூசனைகளாம். அந்தணன்: செந்தன்மையுடைய கலைக்கோட்டு முனிவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the horse sacrifice with its leaping steed, and the lofty
  2. oblation that gives sons, and the other rites, the Brahmin
  3. had tended to completion, the guardian of the world
  4. rose up with joy, while all praised him.

What the poem says

The sage completes the horse sacrifice, the special offering for sons and all the related rites. Tacarataṉ rises from the sacrificial hall in delight as everyone praises him. The next verse takes him to his royal assembly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vām pari vēḷviyum, makārai nalkuvatu
ām purai ākuti piṟavum, antaṇaṉ
ōmpiṭa, muṭintapiṉ, ulaku kāvalaṉ
ēmpalōṭu eḻuntaṉaṉ yārum ēttavē.