கம்பராமாயணம் 261 · பால 5.93

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பின்னும் அப்பெருந்தகை - மறுபடியும் அந்தப் பெருந்தகைமையுள்ள தயரத மன்னன்; பிதிர்ந்து வீழ்ந்தது தன்னையும் - பொன் தட்டிலே சிதறி வீழ்ந்த பிண்டத்தையும்; ஒன்னலர்க்கு இடமும் வேறு மன்னுயிர் தமக்குநீள் வலமும் துள்ள - பகைவர்களுக்கு இடப்புறமும், மற்றும் உலகத்து உயிர்களுக்கெல்லாம் வலப்புறமும் தோள், கண் முதலியன துடிக்க; சுமித்திரை தனக்கு நல்கினான் - சுமித்திரைக்கே கொடுத்தான்.

ஆண்களுக்கு இடம் துடித்தல் தீமை, வலம் துடித்தல் நன்மை என்பதால் பகைவர்களுக்கு இடமும், மற்றுள்ளோர்க்கு வலமும் துடித்ததென்றான். மன்னுயிர்: நிலை பெற்ற உயிர் (புகழோடு நிலவுதலாம்). தயரதன் அமுத பிண்டத்தைத் தேவியர் மூவருக்கும் முறையே கொடுத்துப் பின்னர் பிதிர்ந்து சிதறியவைகளைத் திரட்டி மறுபடியும் சுமித்திரை கைகளில் கொடுத்தான். இருபங்குகளைப் பெற்ற சுமித்திரை இரு பிள்ளைகளைப் பெற்றாள் என்பதை அறிகிறோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Again that noble one, what had scattered and fallen,
  2. that too he gave to Cumittirai,
  3. while for enemies the left side, and for the lasting beings that flourish
  4. in the other world, the right, throbbed long.

What the poem says

Tacarataṉ gathers the morsels that had scattered on the plate and gives them too to Cumittirai. Having received two portions, she will bear two sons, Ilakkuvaṉ and Catturukkaṉ.

At that moment, omens are felt: for men, a throbbing on the left side of the body is unlucky and on the right lucky. Enemies feel the left throb and all good beings the right.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉum ap peruntakai, pitirntu vīḻntatu
taṉṉaiyum, cumittiraitaṉakku nalkiṉāṉ,
oṉṉalarkku iṭamum, vēṟu ulakiṉ ōṅkiya
maṉṉuyirtamakku nīḷ valamum tuḷḷavē.