கம்பராமாயணம் 2657 · ஆரணிய 1.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன யக்கன் , ஆதியாய் !
இன்னல் தீரும் ஈகையான்
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் .
பொருள் · Meaning in Tamil
நான் அன்ன சாபம் மேவி- நான் அச்சாபத்தை அடைந்து; இன்னல் தீர்வது ஏது எனா - இத்துன்பமாம் சாபம் எனக்குத் தீர்வது எவ்வாறு என நான் கேட்க; நின்ன தாளின் நீங்கும் என்று - உன்னுடைய திருவடி படும் அளவில் இச்சாபம் என்னை விட்டு நீங்கும் என்று; உன்னும் எற்கு உணர்த்தினான் - ஆராய்ந்து நோக்கும் எனக்குத் (குபேரன்) தெரிவித்தான். எற்கு - எனக்கு, அசுரச்சாரியை இன்றி வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having fallen under that curse, I
- asked how this misery might end;
- that it would leave me at the touch of your feet
- he made known to me as I wondered.
What the poem says
When Tumpuru asked how the curse would end, Kupēraṉ told him that it would be lifted when Irāmaṉ's feet touched him. That prophecy has now come true, as Irāmaṉ pushed him into the pit with his foot.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa cāpam mēvi nāṉ
iṉṉal tīrvatu ētu eṉā
niṉṉa tāḷiṉ nīṅkum eṉṟu
uṉṉum eṟku uṇarttiṉāṉ.