கம்பராமாயணம் 266 · பால 5.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முரசினம் கறங்கிட - முரசும், அதற்கினமான பலவகை வாத்தியங்களும் முழங்கவும்; முத்த வெண்குடை விரசி மேல் நிழற்றிட - முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடை மேலே நிழல் தரவும்; வேந்தர் சூழ்தர - மன்னர் பலரும் சூழ்ந்துவரவும்; அரசு அவை அடைந்துழி - தயரதன் அரசவையை அடைந்தபோது; அயனும் நாண்உற உரை செறிமுனிவன் - நான்முகனும் நாணும்படி பலரும் புகழும் புகழுரை பொருந்திய முனிவனான வசிட்டனுடைய; தாள் இறைஞ்சி ஓங்கினான் - பாதங்களை வணங்கிப் பெருமை எய்தினான்.
முரசினம்: முரசும், அதன் இனமும் ஆகும். முத்த வெண்குடை என்பதை 'வெண்முத்தக்குடை' என மாற்றிப்பொருள் கொள்க. விரச: நெருங்க (வினையெச்சம்). நிழற்ற: நிழல்கொடுக்க. சூழ்தர. அடைந்துழி: இதில் உழி காலத்தை உணர்த்தும். வேள்வியை நடத்த வசிட்டனே காரணம் என்பதால் அனைவரும் புகழ்ந்த புகழ்மொழிகளுக்கு உரியவன் என்பதால் 'உரைசெறி' என்றான். வசிட்டனை வணங்கிப் பெருமை எய்தினான் மன்னன் என்பதால் “ஓங்கினான்” என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As drums and their kind resounded, and the white umbrella hung with pearls
- spread its shade close above him, with kings around him,
- when he reached the royal assembly, he bowed at the feet of the sage
- so rich in praise that even Brahmā would be abashed, and was exalted.
What the poem says
Returning in procession under his white royal umbrella hung with pearls, Tacarataṉ enters the assembly and bows to Vacittaṉ, whose counsel made the sacrifice possible.
Vacittaṉ's praise outshines even Brahmā's. By bowing to his guru the king himself rises in honour.