கம்பராமாயணம் 267 · பால 5.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரிய நல்தவம் உடை - (தயரதன்) அரிய நல்ல தவத்தைச் செய்துள்ள; வசிட்டன் ஆணையால் - தனது குலகுருவாகிய வசிட்ட முனிவனது கட்டளைப்படி; இரலை நல்சிருங்கமா இறைவன் தாள் தொழா - கலைக்கோட்டு முனிவனது பாதங்களைத் தொழுது; உரிய பற்பல உரை பயிற்றி - தக்க பலப்பல துதிமொழிகளைத்தொழுது; உய்ந்தனென் - உன்னால் நான் உய்வுபெற்றேன்; பெரிய நல்தவம் இனிப் பெறுவது யாது என்றான் - பெரிய நல்லதவத்தைச் செய்து நான் பெறுவது இதைவிட வேறு என்ன இருக்கிறது என்று கூறினான்.
அரிய: பிறரால் செய்தற்கரிய (பெயரெச்சம்). இரலை: மான். சிருங்கம்: கொம்பு. நல்மா இறைவன்: நல்ல சிறந்த குரு. தொழா: தொழுது (செயா என்னும் வாய்பாட்டு வினைஎச்சம்). உரிய: தகுந்த. உரை: துதிமொழிகள். பயிற்றி: சொல்லி. “பெறுவது யாது” இதில் யாது என்ற வினா எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. யாதொன்றும் இல்லை என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the bidding of Vacittaṉ of rare and good penance,
- he worshipped the feet of the great lord of the fine deer's horn,
- spoke many fitting words, and said, 'I am saved;
- O one of great and good penance, what more is there now to gain?'
What the poem says
On Vacittaṉ's instruction, Tacarataṉ bows to Kalaikkōṭṭu Muṉivaṉ, the sage with the deer's horn, and thanks him: there is nothing left for him to wish for.
The question 'what more to gain?' implies its answer: nothing.