கம்பராமாயணம் 268 · பால 5.100

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கி ஏ
உய்ந்தனன் அடியனேன்' என்ன, ஒள் தவன்,
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தித், தேர் மிசை
வந்த மா தவரொடும் வழி கொண்டு ஏகினான்.

பொருள் · Meaning in Tamil

எந்தை! நின் அருளினால் - எந்தையே! உமது அருள் துணையால்; இடரின் நீங்கியே உய்ந்தனன் அடியனேன் என்ன - துன்பங்களில் இருந்து நீங்கி அடியவனாகிய நான் உய்ந்தேன் என்று தயரதன் சொல்லவே; ஒண்தவன் சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி - உயர்ந்த தவத்தினனாகிய கலைக்கோட்டு முனிவன் நிறைந்த மனமகிழ்ச்சியால் மன்னனை வாழ்த்தி; வந்த மாதவரொடும் தேர்மிசை வழிக்கொண்டு ஏகினான் - தன்னுடன் வந்த தவமுனிவர்களோடும், தேரேறி, தமது உறைவிடம் நோக்கிச் செல்லலானான்.

“எந்தை” என்பதற்கு எனது தந்தை என்பது பொருளாயினும், இங்கு ஆசிரியர் என்னும் முறைமையை உணர்த்துவதாகும். கலைக்கோட்டு முனிவனது அருள் துணையால் மக்கட்பேறு வாய்ப்பது உறுதியாதலின் 'இடரின் நீங்கியே உய்ந்தனன்' என்றான். “சிந்தையுள் மகிழ்ச்சி” என்றதால், மன்னன் செய்த குறையேதுமில்லாத உபசாரங்களால் மாமுனிவன் மகிழ்ந்தான் என்பதைக் காட்டி நின்றது. ஒண்தவன்: சிறந்த தவத்தை உடையவன் (பண்புத் தொகை). மிசை: ஏழனுருபு. வழிக்கொள்ளல்: புறப்படுதலாம். முனிவன் மனமார மகிழ்ந்து வாழ்த்தினான் என்பதைச் 'சிந்தையுள் மகிழ்ச்சி' என்பது குறித்து நிற்பதுவும் ஆம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My father! By your grace, freed from my distress,
  2. I, your servant, am saved,' he said; and the bright ascetic,
  3. blessing him with joy in his heart, mounted his chariot
  4. and set out on his way with the great ascetics who had come.

What the poem says

Tacarataṉ calls the sage 'my father' as a mark of reverence for a teacher. Sure now of sons, he says he has been rescued from his sorrow.

The sage, pleased with all the honour he has received, blesses the king from his heart and leaves with the sages who came with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'entai! niṉ aruḷiṉāl iṭariṉ nīṅkiyē
uyntaṉeṉ aṭiyaṉēṉ' eṉṉa, oṇ tavaṉ,
cintaiyuḷ makiḻcciyāl vāḻtti, tērmicai
vanta mā tavaroṭum vaḻikkoṇṭu ēkiṉāṉ.