கம்பராமாயணம் 2689 · ஆரணிய 2.26

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரைச் செற்றும் சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்
திவசம் ஆம் நல் அறத்தின் செம் நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமைத் தங்கள்
கவசமாய் ஆருயிராய்க் கண்ணாய் மெய்த் தவமாய்க் கடை இலா ஞானமாய்க் காப்பானைக் காணா
அவசமாய்ச் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் .

பொருள் · Meaning in Tamil

துவசம் ஆர் தொல்லமருள் துன்னாரைச் செற்றும்-கொடிகள் நிறைந்த பழைய போர்களில் பகைவர்களை அழித்தும்; சுருதிப் பெருங் கடலின் சொல்பொருள் கற்பித்தும் - வேதமாகிய பெரிய கடல்களின் எல்லையற்ற சொற்களையும் அவற்றின் பொருள்களையும் உபதேசித்தும்; திவசம் ஆர் நல் அறத்தின் செந் நெறியில் உய்த்தும் - நாள்தோறும் பொருந்திய நல்ல தருமங்களின் சிறந்த வழியில் கொண்டு செலுத்தியும்; திரு அளித்தும் - செல்வத்தைக் கொடுத்தும்; வீடு அளித்தும் - பரம பதத்தைக் கொடுத்தும்; சிங்காமைத் தங்கள் கவசம் ஆம் - அழியாதவாறு (தேவாரம்) தங்களுக்குக் கவசம் ஆகியும்; ஆர் உயிர் ஆய்- அருமை உயிர் ஆகியும்; கண் ஆம்- கண் ஆகியும்; மெய்த்தவம் ஆய் - உண்மைத் தவம் ஆகியும்; கடையிலா ஞானம் ஆம் - முடிவற்ற மெய்ஞ்ஞானம் ஆகியும், காப்பானைக் காணா - காத்து வரும் பரம்பொருளாம் இராமனைக் கண்டு; அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் - தன்னிலை மறந்து (அவண்) பக்கத்தில் நின்றவனாகி; அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் - (இராமனின் பெருமைகளைத்) தெரியாதவன் போல தான் அறிந்த பெருமைகளை எல்லாம் தெரிந்தவாறு கூறித் துதிப்பான் (இந்திரன்).

தொல்லமர்- பழங்காலத்தில் தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த போர். சுருதிப் பொருள் கற்பித்த செயல் முன்னர் அன்னமாய்ப் பிரமனுக்கு உபதேசித்ததாகும். கடல் போல் வேதம் எல்லை அற்றது எனவே கடலாக உருவகிக்கப்பட்டது. சிங்குதல் - குறைதல், சுருங்குதல், அழிதல். கவசம் - பகைவரால் ஊறு நேராதவாறு அணியும் மெய்யுறை. பிரளய காலத்தில் அனைத்துப் பொருள்களையும் தன்னுள் அழியாமல் காப்பதால் கவசமாயிற்று, வெளியே கவசமாயும் உள்ளே உயிராயும் உள்ளும் புறமும் காப்பவன் ஆயினான். அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்தில் 'ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப' (1313) எனக் கூறப்பட்டது. பக்தி மிகுதியால் சிந்தை அழிந்த நிலையை இந்திரன் அடைந்தான்; எனவே அறியாதவன் போல அறிந்த எலாம் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Slaying foes in ancient battles thick with banners, teaching the words and meanings of the great ocean of scripture,
  2. leading them day after day on the straight path of good dharma, granting fortune, granting release, so that they never perish, being their
  3. armour, their dear life, their eyes, their true penance, their endless wisdom: seeing him who guards them so,
  4. he stood aside, overwhelmed, his mind undone, and like one who knew nothing, spoke all that he knew.

What the poem says

The metre changes as Intiraṉ begins his hymn. He sees in Irāmaṉ the god who has always protected the gods: defeating demons in the ancient wars, teaching the Vedas, guiding them in dharma, giving wealth and liberation, and being both the armour outside them and the life within.

Overwhelmed with devotion, Intiraṉ stands to one side and, as though he knew nothing of Irāmaṉ's greatness, recites everything he knows of it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuvacam ār tol amaruḷ tuṉṉāraic ceṟṟum curutip peruṅ kaṭaliṉ col poruḷ kaṟpittum
tivacam ār nal aṟattiṉ cenneṟiyil uyttum tiru aḷittum vīṭu aḷittum ciṅkāmait taṅkaḷ
kavacam āy ār uyir āy kaṇ āy meyt tavam āy kaṭai ilā ñāṉam āy kāppāṉaik kāṇā
avacam āy cintai aḻintu ayalē niṉṟāṉ aṟiyātāṉ pōla aṟinta elām colvāṉ.