கம்பராமாயணம் 2688 · ஆரணிய 2.25

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காணா மனம் நொந்து கவன்றனன் ஆல் ,
ஆள் நாதனை அந்தணர் நாயகனை
நாள் நாளும் வணங்கிய நல் முடியால் ,
தூண் ஆகிய தோள் கொடு அவன் தொழுவான் .

பொருள் · Meaning in Tamil

காணா - (அங்கு இந்திரன் இராமனைப்) பார்த்து; மனம் நொந்து கவன்றனன் - மனம் நோயுற்றுக்கவலை கொண்டான் ஆக; ஆண்நாதனை - ஆண்களின் தலைவனை (புருஷோத்தமனை); அந்தணர் நாயகனை - அந்தணராம் முனிவர்க்குத் தலைவனாம் இராமனை; நாள் நாளும் வணங்கிய நன்முடியால் - நாள் தோறும் தொழுகின்ற தன்மேலான சிரத்தால்; தூண் ஆகிய தோள் கொடு அவன் தொழுவான் - தூண் போன்ற தன் புயங்கள் பட இராமனின் திருவடிகளை இந்திரன் வணங்குவான்; ஆல் - அசை.

கண்டு மனம் நொந்து கவன்றனன் என்பதால் பரமபத வாழ்வை விட்டுத் தனக்காக மனித வடிவெடுத்ததுடனன்றிக் காடுகளில் கால் நோவ வருந்தி இராமன் திரிதலைக் கண்ட நிலையை அறியலாம். இராமன் திருவடிகளில் இந்திரன் தலையும் தோளும் படத் தொழுதான் என்பதால் மார்பு கால் முதலிய பிற உறுப்புகளாலும் வணங்கினான் என அறியலாம். இது உபலட்சணம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing him, he was grieved at heart and troubled;
  2. the Lord of men, the leader of the Brahmins,
  3. with the fine crowned head that bowed to him day after day
  4. and with his pillar-like shoulders, he worshipped.

What the poem says

Intiraṉ is distressed to see that the Supreme Lord has left his heavenly state and taken human form for the gods' sake, and now wanders on foot through forests. He prostrates himself at Irāmaṉ's feet, head and shoulders touching the ground; naming those parts implies a full prostration.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṇā maṉam nontu kavaṉṟaṉaṉāl,
āṇ nātaṉai antaṇar nāyakaṉai
nāḷ nāḷum vaṇaṅkiya naṉ muṭiyāl,
tūṇ ākiya tōḷkoṭu avaṉ toḻuvāṉ.