கம்பராமாயணம் 2687 · ஆரணிய 2.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையோர் இறை - தேவர்க்கரசனாம் இந்திரன்; காசினியின்கண் - பூமியின் மேல், அருநான் மறையின் கனியை - அரிய நான்கு வேதங்களின் இனிய பழமாம் இராமனை; கண் தாமரை போல் கருஞாயிறு என - கண்கள் தாமரை இதழ் போலும் நிறம் கரிய சூரியனே போலும் என்று; கண்தாம் அவை ஆயிரமும் கதுவக் கண்டான் - தன் ஆயிரம் கண்களுமே (இராமன் உருவில்) பொருந்தி ஊன்றப் பார்த்தான்; தான் - அசை.
இராமன் ஞாயிறு போல் ஒளியும் கரிய நிறமும் கொண்டவனாதலின் கரு ஞாயிறு என உருவகிக்கப்பட்டான். 'கரு ஞாயிறு போல்வர்' என முன்னரும் கண்டோம் (1163). நான்மறையின் கனி என்ற பொருள் விளங்க 'வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை' எனப் பெரிய திருமொழியும் கூறும் (2-3: 2). இப்பாடலில் கருஞாயிறு என இல்பொருள் சுட்டப் பெறுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that all thousand of his eyes might fasten on him,
- with eyes like lotuses, like a dark sun,
- the lord of the unblinking gods beheld, upon the earth,
- the fruit of the four rare Vedas.
What the poem says
Intiraṉ sees Irāmaṉ, the sweet fruit of the four Vedas, now walking the earth, and gazes at him with all his thousand eyes. Irāmaṉ is a 'dark sun', radiant yet dark-skinned, a thing that does not exist in nature; the poet has used the image before.