கம்பராமாயணம் 2711 · ஆரணிய 3.4

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கனை வரு கடுஞ்சினத்து அரக்கர் காய , ஓர்
வினை பிறிது இன்மையின் , வெதும்புகின்றனர் ;
அனல் வரு கானகத்து , அமுது அளாவிய
புனல் வர , உயிர் வரும் உலவை போல்கின்றார் .

பொருள் · Meaning in Tamil

கனல் வரு கடுஞ்சினத்து அரக்கர் காய - தீப்போல் ஒளிவிடும் மிக்க கோபத்தையுடைய இராக்கதர்கள் வருத்துவதால்; ஓர் வினை பிறிது இன்மையின் - (அவர்களை அழிக்கும்) தக்க செயல் வேறு ஒன்றும் இல்லாமையால்; வெதும்புகின்றனர்- வாடும் அம்முனிவர்கள்; (இராமனின் வரவால்) அனல் வரு கானகத்து - தீப்பற்றி எரியும் காட்டில்; அமுது அளாவிய புனல்வர - தேவரமுதத்தோடு கலந்த நீர்ப் பெருக்கு வருவதால்; உயிர் வரும் உலவை போல்கின்றார் - அழியாது பிழைத்துத் தளிர்க்கும் உலர்ந்த மரங்களை ஒத்தவராகின்றார்கள்.

தண்டகாரணியத்து முனிவர்களுக்குக் காட்டிலுள்ள உலர்ந்த மரங்களும், அரக்கர்களுக்கு நெருப்பும், அவர்களுடைய சினத்திற்குக் கோபத்தின் வெப்பமும், இராமனின் வருகைக்குக் குளிர்ந்த நீர்ப்பெருக்கின் வரவும் முனிவர் மகிழ்ந்தமைக்கு உலர்ந்த மரங்கள் தளிர்த்துச் செழித்தலும் உவமையாம். காப்பியத்தில் இத்தகைய அடுக்குவமைகள் அதன் அழகைப் பெருக்க உதவும். திருமால் மோகினி வடிவில் தேவர்க்கு அமுதம் அளித்தது போல இராமனின் வரவே அமுதளாவிய புனல்வரவாகக் கூறப்பெற்றுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As demons of fiery, cruel wrath scorched them, with no
  2. other course open to them, they had withered;
  3. now they were like trees in a burning forest that, as water
  4. mixed with nectar flows in, come back to life.

What the poem says

Tormented by the fiery demons and unable to do anything about it, the sages had been like withered trees in a forest fire. Irāmaṉ's arrival is like a flood of water mixed with nectar, and they revive and put out new leaves. The commentary notes the chain of matched comparisons and recalls Tirumāl giving the gods nectar in the form of Mōkiṉi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉal varu kaṭuñ ciṉattu arakkar kāya, ōr
viṉai piṟitu iṉmaiyiṉ, vetumpukiṉṟaṉar;
aṉal varu kāṉakattu, amutu aḷāviya
puṉal vara, uyir varum ulavai pōlkiṉṟār.