கம்பராமாயணம் 2710 · ஆரணிய 3.3

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண்டைய அயன் தரு பாலகில்லரும்- முதன் முதலில் தோன்றிய பழமையான பிரமதேவன் பெற்றவர்களாகிய பாலகில்லரும், முண்டரும் - மழித்த தலையை உடையவர்களும்; மோனரும் - மௌன விரதம் பூண்டவர்களும்; முதலினோர்கள் - முதலியவர்களாகிய; அத்தண்டக வனத்துறை தவத்துளோர் எலாம் - அந்தத் தண்டகாரணியம் எனும் காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் எல்லாம்; இராமனைக் கண்டனர் களிக்கும் சிந்தையார் - இராமனைப் பார்த்தவர்களாய் மகிழும் மனமுடையவர் ஆனார்கள்.

பாலகில்லர் - வாலகில்யர் பிரமனது மயிரிலிருந்து தோன்றியவர்கள்; அவனுடைய மானசபுத்திரர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர் என்பர்; பெருந்தவம் புரிந்தவர்கள்; இவர்கள் கட்டைவிரல் அளவுள்ள குறுவடிவினர்; நாளும் கதிரவனின் இரதத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். மோனர்- மௌனர் என்பதன் போலி. களிக்கும் சிந்தையார் கண்டனர் எனவும் பொருள் முடிவு கொள்வர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Pālakillar, born of Ayaṉ long ago,
  2. the shaven ones, the silent ones, and all the rest,
  3. every ascetic who lived in that Taṇṭaka forest,
  4. saw Irāmaṉ, and their hearts rejoiced.

What the poem says

The forest's many hermits come to see Irāmaṉ and are overjoyed: the Vālakhilyas, thumb-sized sages born from Piramaṉ's mind who, sixty thousand strong, circle the sun's chariot every day; sages with shaven heads; and sages under a vow of silence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṭaiya ayaṉ taru pālakillarum,
muṇṭarum, mōṉarum, mutaliṉōrkaḷ, at
taṇṭaka vaṉattu uṟai tavattuḷōr elām
kaṇṭaṉar irāmaṉaik kaḷikkum cintaiyār.