கம்பராமாயணம் 2709 · ஆரணிய 3.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலைகளும் - பல மலைகளையும்; மரங்களும் - பல மரங்களையும், மணிக்கற்பாறையும் - அழகிய கற்பாறைகள் நிறைந்த இடங்களையும், அலை புனல் நதிகளும் - அலைகளோடு கூடிய நீர் மிக்க ஆறுகளையும்; அருவிச் சாரலும் - நீர் அருவி பாயும் மலைப் பக்கங்களையும்; இலை செறி பழுவமும் - இலைகள் அடர்ந்த சோலைகளையும்; இனிய சூழலும் - இனிமையாய் விளங்கிய இடங்களையும்; நிலை மிகு தடங்களும் -ஆழம் மிகுந்த நீர்நிலைகளையும்; இனிது நீங்கினார் - இனிமையாகக் கடந்து சென்றனர்.
மலைகள் முதலிய இனிய சூழல் பலவும் இராமன் முதலியவர்களுக்குத் தோற்றத்தால் கண்ணுக்கு இனிமையும் வாழ்தற்கு மகிழ்ச்சியும் அளித்தமையால் நடந்து சென்ற வருத்தம் தெரியாமல் காட்சிகளில் இனிமை கண்டு மகிழ்ந்தனர். பழுவம் - காடு, கல்லதரத்தமுமாம் (சீவக. 1185). சூழல் - தவச்சாலைகளுமாம், நிலை - பரப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mountains and trees, slopes of jewel-bright rock,
- rivers of rolling waters, hillsides where falls cascade,
- groves thick with leaves, lovely places all around,
- and wide, deep pools they passed by, delighted.
What the poem says
Irāmaṉ, Ilakkuvaṉ and Cītai travel on through the Taṇṭaka forest. The mountains, rivers, waterfalls, groves and pools are so lovely that they forget the weariness of walking.