கம்பராமாயணம் 2708 · ஆரணிய 3.1

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனையவன் இறுதியின் அமைவு நோக்கினர் ,
இனியவர் , இன்னலின் இரங்கும் நெஞ்சினர் ,
குனிவரு திண்சிலைக் குமரர் , கொம்பொடும்
புனிதனது உறையுள் நின்று அரிதில் போயினார் .

பொருள் · Meaning in Tamil

இனியவர் குனிவரு திண் சிலைக்குமரர் - எல்லோர்க்கும் இனிமையை அளிப்பவர்களும் வளைந்த வலிய வில்லையுடையவர்களுமான இராமலக்குவர்; அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் -அந்தச் சரபங்க முனிவரின் முடிவின் நிலையைப் பார்த்தமையால்; இன்னலின் இரங்கும் நெஞ்சினர் - துன்பத்தால் வருந்திய மனமுடையவர்களாய்; கொம்பொடும் - பூங்கொம்பு போன்ற சீதையுடன்; புனிதனது உறையுள் நின்று அரிதின் போயினார் - தூயவராம் அம்முனிவரின் தவச்சாலையிலிருந்து துன்பத்தோடு நடந்து சென்றனர்.

சரபங்கர் தீயில் புக்கு நல்லுலகம் அடைந்ததைப் பார்த்து இராமன் முதலியோர் வியப்பெய்தினர் என்பர் வால்மீகி. இங்குக் கம்பர் அந்நிலையைத் துன்பச் சூழலாகக்காட்டுகிறார். தீப்புகு காட்சி, யாவர் மனத்தையும் கலங்கச் செய்வதாம். உறையுள் -இருப்பிடம், அரிதிற் போயினார் - அம்முனிவரின் பிரிவால் வருந்திச் சென்றனர் எனலுமாம். கொம்பு - உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having seen how that one met his end,
  2. the gentle ones, their hearts aching with grief,
  3. the princes of strong, curving bows, with her who was like a bough,
  4. left the pure one's dwelling, and went on with heavy steps.

What the poem says

The chapter of Akattiyar begins. Having watched Carapaṅkaṉ enter the fire, Irāmaṉ, Ilakkuvaṉ and Cītai leave his hermitage in sorrow. In Vālmīki the princes are filled with wonder at the sight; Kampaṉ instead makes the moment one of grief, since such a scene would trouble anyone's heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyavaṉ iṟutiyiṉ amaivu nōkkaliṉ,
iṉiyavar, iṉṉaliṉ iraṅkum neñciṉar,
kuṉi varu tiṇ cilaik kumarar, kompoṭum
puṉitaṉatu uṟaiyuḷniṉṟu aritiṉ pōyiṉār.