கம்பராமாயணம் 2707 · ஆரணிய 2.44

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் - எல்லா அண்டங்களையும் உலகங்களையும் யாரும் அறியாதபடி; உண்டவன் ஒருபெயர் உணர்குநர் உறுபேறு - எடுத்துண்ட திருமாலாம் இராமனின் ஒப்பற்ற நாமத்தைச் சிந்திப்பவர் அடையும் சிறப்பு; எண்தவ நெடிது எனின் - கணக்குக்கு எட்டாத பெரிது ஆகும் என்றால்; இறுதியில் அவனைக் கண்டவர் - முடிவில் அப்பரம் பொருள் ஆனவனைக் கண்டவர்; உறு பொருள் கருதுவது எளிதோ - அடையும் சிறந்த பொருளை நினைப்பது எளியதோ? (ஆகாது).

அண்டமும் அகிலமும் உண்டவன் - யுகமுடிவில் எல்லாவற்றையும் திருமால் தன்னுள் அடக்குவதைக் குறிக்கும். ஒரு - ஒப்பற்ற. எண் - நினைப்பும் ஆம். பேறு - பெறும் பதவி. உறு - மிகுதி குறிக்கும் உரிச்சொல். தவநெடிது என்பதையும் உரிச்சொற்றொடராகக் கொள்வர் சிலர். இது தொடர்நிலைச் செய்யுள் பொருட்பேறணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cosmos and every world, by a way none can know,
  2. he swallowed; if what is gained by those who know but one name of his
  3. is great beyond all reckoning, then of those who saw him at the end
  4. the gain: is it easy even to conceive?

What the poem says

The chapter closes with the poet's reflection. Tirumāl, here Irāmaṉ, holds all the worlds within himself at the end of each age. If merely meditating on his name brings immeasurable reward, how could one even imagine what is gained by Carapaṅkaṉ, who saw him face to face at the moment of death?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṇṭamum akilamum aṟivu aru neṟiyāl
uṇṭavaṉ oru peyar uṇarkunar uṟu pēṟu
eṇ tava neṭitu 'eṉiṉ, iṟutiyil avaṉaik
kaṇṭavar uṟu poruḷ karutuvatu eḷitō?