கம்பராமாயணம் 2706 · ஆரணிய 2.43

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரும் , முனிவரும் , உறுவது தெரிவோர்
யாவரும் , நறு விரை மலர் அயன் முதலோர்
ஏவரும் , அறிவினில் இரு வினை ஒருவிப்
போவது கருதும் அவ் அரு நெறி புக்கான் .

பொருள் · Meaning in Tamil

உறுவது தெரிவோர்- இனி நடப்பதைத் தம் அறிவால் தெரிந்து கொள்ளக் கூறியவர் ஆன; மாவரும் நறுவிரை மலரஅயன்-பெருமை மிக்க நல்ல தெய்வ மணமுள்ள தாமரை மலர் மீது அமர்ந்த பிரம தேவனும்; தேவரும் - தேவர்களும், முனிவரும் முதலோர் - முனிவரும் முதலானோர்; ஏவரும் - மற்றை எல்லோரும்; இருவினை அறிவினில் ஒருவி - நல்வினை தீவினை ஆகிய இரண்டையும் ஞானத்தால் அறிந்து நீக்கி; போவது கருதும் - கடைசியாக அடைய எண்ணும்; அவ் அருநெறி புக்கான் - பெறற்கரிய அந்தப் பரமபதத்தைச் சேர்ந்தார்.

உறுவது தெரிவோர் என்பது எதிர் காலத்தைக் குறித்தது. இறப்பு, நிகழ்வு ஆகிய இரு காலத்தை அறிவதை விட எதிர்காலத்தை அறிதலே கடினம். உபலட்சணத்தால் மற்ற இரு காலத்தையும் குறிப்பால் உணர்த்தல் கொண்டு முக்கால ஞானியர் எனலாம். மலரயன் தேவர் முதலோர் இருவினைப் பயனால் அடையும் நிலை பெற்றவர் என்பதாம். தம் வினைப்பயனை இராமன் திருவடியில் இட்டுச் சரபங்கர் பரமபதம் அடைந்தார் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods, the sages, those who know what is to come,
  2. Ayaṉ of the great and fragrant flower, and all the rest
  3. hope, once they have cast off both kinds of deeds by wisdom, to go
  4. by that rare path: and that path he entered.

What the poem says

Carapaṅkaṉ reaches the supreme state that the gods, the sages, the seers who know the future, and even Piramaṉ hope to reach only after wisdom has freed them from all karma. Those beings hold their positions as the fruit of karma, whereas the sage laid his karma at Irāmaṉ's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarum, muṉivarum, uṟuvatu terivōr
mā varum, naṟu virai malar ayaṉ mutalōr
ēvarum, aṟiviṉil iru viṉai oruvi
pōvatu karutum av aru neṟi pukkāṉ.