கம்பராமாயணம் 2713 · ஆரணிய 3.6

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரக்க அரும் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்-மறைப்பதின்றிச் செய்யும் கொடிய செய்கைகளை உடைய இராக்கதர்கள் பகையால் வருத்துவதால்; பொரற்கு இடம் இன்மையின் - போராடுவதற்குத் தமக்கு இடம் இல்லாமையால்; புழுங்கிச்சோருநர் - மனம் நொந்து சோர்வடைந்தவர்களும், அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் - இராக்கதர் என்னும் கடலிடை விழுந்து மூழ்குகின்றவர்களும் ஆன அம்முனிவர்கள்; ஒருமரக்கலம் பெற்றென - ஒரு கப்பலைப் பெற்றாற்போல; மறுக்கம் நீங்கினார் - (இராமனைக் கண்டதும்) மனக் கலக்கம் நீங்கப் பெற்றனர்.

அரக்கர் யாரிடமும் அஞ்சார் ஆதலால் கரக்கருந் கடுந் தொழில் அரக்கர் எனப்பட்டனர். கடலிடை மூழ்க இருந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கக் கப்பல் ஒன்று கிடைத்தது போல் அரக்கரால் துன்புற்ற முனிவர்களுக்கு இராமன் உதவி புரிய வந்தனன். அரக்கர் - கடல், முனிவர் - கடலில் ஆழ்வோர், இராமன் - மரக்கலம் என உருவகம் செய்துள்ளார். போர்புரிய முனிவர்க்குத் தவநிலை இடம் தராது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Scorched by the demons whose cruel deeds they never trouble to hide,
  2. with no room to fight, they had been smouldering and failing,
  3. sinking in the sea called demons; now, as if they had found
  4. a ship, they were rid of their distress.

What the poem says

The demons fear no one and so do their cruel deeds openly. The sages' ascetic life left them no room to fight back; they were drowning in a sea of demons. Irāmaṉ's arrival is like a ship appearing to rescue them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karakka aruṅ kaṭun toḻil arakkar kāytaliṉ
poraṟku iṭam iṉmaiyiṉ puḻuṅkic cōrunar,
arakkar eṉ kaṭaliṭai āḻkiṉṟār, oru
marakkalam peṟṟeṉa maṟukkam nīṅkiṉār.