கம்பராமாயணம் 2714 · ஆரணிய 3.7

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெரிஞ்சுற நோக்கினர் - நன்றாகத் தெரியும்படி இராமனைக் கண்ட அம் முனிவர்கள்; செய்த செய்தவம் அருஞ்சிறப்பு உதவ- தாம் வருந்திச் செய்த சிறந்த தவமானது பெறற்கரிய சிறப்பைக் கொடுக்குமாறு; நல்அறிவு கைதர- தாம் பெற்ற நல்ல ஞானம் உதவி செய்ய, விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந்துயர்ப் பெருஞ்சிறை வீடு - விரிந்து தம்மை வலிதாய்ப் பற்றியிருந்த கொடிய பிறவியாம் துன்பத்தைத் தரும் பெரிய சிறையிலிருந்து விடுதலை, பெற்றனைய பெற்றியார் - அடைந்ததைப் போன்ற தன்மையுள்ளவர்களானார்கள்.

முனிவர் செய்த தவம் நல்ல ஞானமாம் மெய்யறிவைத் தரும். அதனால் தம் பிறவியாகிய சிறையிலிருந்து விடுதலை பெற்றவர்கள் போலாயினர். தெரிஞ்சுற நோக்குதல் இராமனைத் திருமாலின் திருவவதாரம் எனக் காணுதல்.

தெரிஞ்சு, விரிஞ்சு என்பன முறையே தெரிந்து, விரிந்து எனும் சொற்களின் போலிகள். கைதரல் - உற்றுழி உதவல். தயரதன் மந்திர சபையில் தன் கருத்தை வெளியிடும்போது 'கருமம் கைதர, மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்' (1327) எனக் கூறும்போது 'கைதர' என்ற சொல்லாட்சியை உணரலாம்.

வீடு - விடுதலை, முதனிலை திரிந்த தொழிற் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They gazed at him and knew him clearly; the penance they had done
  2. yielding its rare reward, and true understanding lending its hand,
  3. from the cruel suffering of birth that had gripped them wide and fast,
  4. that great prison, they were like men who had won release.

What the poem says

Their long penance and the wisdom it gave let the sages recognise Irāmaṉ as the incarnation of Tirumāl. Seeing him, they feel as if they had already been freed from the prison of rebirth. Teriñcu and viriñcu are dialect forms of terintu and virintu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teriñcuṟa nōkkiṉar; ceyta cey tavam
aruñ ciṟappu utava, nal aṟivu kaitara,
viriñcuṟap paṟṟiya piṟavi ven tuyarp
peruñ ciṟai vīṭu peṟṟaṉaiya peṟṟiyār.