கம்பராமாயணம் 2726 · ஆரணிய 3.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை - தருமத்திலிருந்து நீங்காத முனிவர்களின் பெருமையை; மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் - மறந்து (உங்களுக்குக்) கேடு செய்கின்ற அற்பர்களாகிய அரக்கர்களின் பலத்தை அழிக்காமற் போவேன் ஆனால்; இறந்து போகினும் நன்று - அவ்வரக்கர்களால் போரில் மரணமடைந்தாலும் நல்லதே; இது அல்லது - இந்த நல்ல செயலுக்குப் பயன்படுதல் அல்லாமல்; யான் பிறந்து பெறும்பேறு என்பது யாவதோ - நான் பிறந்ததனால் அடையும் நற்பயன் என்பதுதான் எதுவோ? (ஒன்றுமில்லை).
தவா - கெடாத என்றுமாம். நன்றிது - நன்று+இது. இது என்பது அசைநிலை. இராமன் நல்லோரைக் காத்து அல்லோரை அழிக்க அவதாரமெடுத்த உண்மையைக் குறிப்பாக உணர்த்தியது எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The worth of the Brahmins whose path never strays from dharma
- the base ones have forgotten; if I do not destroy their strength,
- better that I die; other than this,
- what gain is there in my having been born?'
What the poem says
Irāmaṉ vows that if he does not break the power of the demons who torment these righteous sages, he would rather die. Protecting them is the whole purpose of his birth, a hint at the reason for the incarnation: to protect the good and destroy the wicked.