கம்பராமாயணம் 2725 · ஆரணிய 3.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேந்தன் வீயவும் - சக்கரவர்த்தியாம் தயரதன் இறப்பவும், யாய் துயர் மேவவும் - தாயாம் கௌசலை துன்பம் அடையவும், ஏந்தல் எம்பி வருந்தவும் - பெருமை உடைய என் தம்பி பரதன் வருத்தமடையவும், என் நகர் மாந்தர் வன்துயர் கூரவும் - எனது (அயோத்தி) நகரத்தில் உள்ள மக்கள் வலிய துன்பத்தைப் பெரிதும் அடையவும்; யான் வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்றான் - நான் காட்டிற்குப் புறப்பட்டு வந்தது என்னுடைய நல்வினையாலாகும் என்று கூறினான்.
மகனைப் பிரிந்த துன்பத்தால் தயரதன் இறந்தான். அண்ணனைப் பிரிந்த துன்பத்தால் பரதன் வருந்தினான். அயோத்தி மக்கள் பட்ட துயரத்தை அயோத்தியா காண்டத்தில் நகர் நீங்குபடலம் கூறும் (1766-1817). முனிவர்களின் பகைதீர்த்து உதவி செய்யப் பெறுவதால் 'போந்தது என்னுடைப் புண்ணியத்தால்' என இராமன் கூறினான்.
யாய் - ஆய் என்பதன் போலி, ஏந்தல் - உயர் குணங்களை ஏந்தியவன், உயர்ச்சி, பெருமையும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That the king should die, that my mother should be stricken with grief,
- that my noble brother should suffer, that the people of my city
- should be weighed down with heavy sorrow, and that I should come to the forest:
- all this has come about through my own good merit,' he said.
What the poem says
Irāmaṉ recalls what his exile has cost: his father's death, his mother Kōcalai's grief, Paratan's suffering and the sorrow of Ayōttī. Yet he calls his coming to the forest the fruit of his own merit, because it has brought him here to help these sages.