கம்பராமாயணம் 2724 · ஆரணிய 3.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பகலவன் குலமைந்தன் - சூரியன் குலத்துத் தோன்றிய இராமன் (முனிவர்களை நோக்கி); புகல் புகுந்திலரேல் - அவ்வரக்கர்கள் (இனித் துன்பம் செய்வதில்லை என்று கூறி) அடைக்கலம் அடையாமல் போவாரானால்; புறத்து அண்டத்தின் அகல்வரேனும் -(இவ்வுலகை விட்டு) அப்புறத்துள்ள வேறு அண்டங்களுக்கு ஓடிப் போவாரானாலும்; என் அம்பொடு வீழ்வரால் - நான் எய்த என் பாணத்தொடு கீழே வீழ்ந்து மாய்வர் ஆதலால், தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் -தகுதியில்லாத இத்துன்பத்தை நீக்குங்கள் நீங்கள்; எனா - என்று சொல்லி; பணிக்கின்றான் - (மேலும்) சொல்கின்றான்.
பகலவன் - பகலைச் செய்பவனாகிய சூரியன், என் அம்பொடு வீழ்வர் எனும் போது இராமன் தன் அம்பு அண்டங்களுக்கு அப்புறத்த அண்டங்களுக்குச் சென்றாலும் அங்கும் சென்று அரக்கரைக் கொல்லும் எனத் தன் ஆற்றலை எடுத்துரைத்தலும் ஆம். அம்பின் வீழ்ச்சி அரக்கர் வீழ்ச்சிக்கும் காரணமாகும். இது செயலின் விரைவைக் காட்டும். அம்பொடு என்பதிலமைந்த உருபு கருவிப் பொருளில் வந்தது. முனிவர்கள் வருத்தம் உறுதல் என்பது தக்கது அன்று என்ற வக்ர தகவில் துன்பம் என்றான். பணித்தல் - உறுதிகூறல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If they do not come seeking refuge, then even should they flee
- to the worlds beyond this world, they will fall with my arrow;
- put away this suffering you never deserved,' so
- the son of the Sun's line declared.
What the poem says
Irāmaṉ, of the solar dynasty, gives his promise. Unless the demons surrender, they will fall to his arrows even if they escape to other universes. The sages, he says, should cast off a suffering they have done nothing to deserve.