கம்பராமாயணம் 2723 · ஆரணிய 3.16

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உருள் உடை நேமியால் உலகை ஓம்பிய
பொருள் உடை மன்னவன் புதல்வ ! போக்கிலா
இருள் உடை வைகலேம் ; இரவி தோன்றினாய் !
அருள் உடை வீர ! நின் அபயம் யாம் 'என்றார் .

பொருள் · Meaning in Tamil

உருளுடை நேமியால் உலகை ஓம்பிய பொருளுடை மன்னவன் புதல்வ - எங்கும் சுற்றிச் செல்லும் ஆணைச் சக்கரத்தால் உலக முழுவதையும் காத்த எல்லாச் செல்வங்களும் உடைய தயரதனுடைய மகனாம் இராமனே!; அருளுடை வீர! - கருணை உடைய வீரனே! போக்கிலா இருளுடை வைகலெம் - நீங்குதலில்லாத் துன்பமாம் இருள் கொண்ட நாட்களை உடையவர்களாயிருக்கிறோம்; இரவி தோன்றினாய் - கதிரவன் போல நீ வந்து எழுந்தருளினாய்; நின் அபயம் யாம் என்றார் -உனக்கு அடைக்கலம் யாம் என்று அம்முனிவர் கூறினர்.

அரசன் ஆணையைச் சக்கரம் என்பது கவிமரபு. உலகை ஓம்பிய மன்னவன் புதல்வ என்றதால் தந்தைக்கு உரிய பொறுப்பு மகனுக்கும் உண்டு என்பதை உணர்த்தும். பொருள் என்பதற்கு உறுதிப்பொருள், செயல், புகழ், மெய்மை எனப் பலபொருள் காண்பர். துன்பத்தை இருளாகக் கூறல் பண்டைய மரபு. போக்கிலா இருள் விடியாத இருளாம். அரக்கரை இருளாகவும் இராமனை இருள் நீக்கும் கதிரவனாகவும் கூறுவர். அருளுடை வீர என்பதால் தீயோரை அழிப்பதற்கு வீரமும் தன்னை விரும்பியவரைப் பாதுகாப்பதற்கு அருளும் உடன் கூறப்பெற்றன. அபயம் - பயமற்ற நிலை. தண்டகாரணிய முனிவர்கள் இராமனிடம் அடைக்கலம் புகுந்த நிலை இதனால் நன்கு விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Son of the king, rich in every good, who guarded the world
  2. with the wheel of his rule that rolls everywhere! Our days
  3. are filled with a darkness that never lifts; you have risen as the sun!
  4. O hero full of grace! We seek refuge in you,' they said.

What the poem says

The sages end their appeal. They remind Irāmaṉ that his father Tacarataṉ protected the world by his rule, so the duty now passes to him. Their days are a night with no dawn, and he is the sun rising to end it. They call him a hero full of grace, valour to destroy the wicked and grace to protect those who come to him, and place themselves under his protection.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uruḷuṭai nēmiyāl ulakai ōmpiya
poruḷuṭai maṉṉavaṉ putalva! pōkkilā
iruḷuṭai vaikalem; iravi tōṉṟiṉāy!
aruḷuṭai vīr! niṉ apayam yām 'eṉṟār.